ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கேவுக்கு, தல தோனி மீண்டும் கேப்டனாகக் களமிறங்கியாலும், அதற்கான எந்த பயனும் கிடைக்கவில்லை. ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெறும் 103 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இந்த ஆட்டத்தின் மூலம், சிஎஸ்கே ஒரு புதிய கேவலமான சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 2019-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பெற்ற குறைந்தபட்ச ஸ்கோர் 109 என்பது. தற்போது 103 ரன்கள் என்ற இந்த ஸ்கோர், ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே தங்களது சொந்த மைதானத்தில் எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராக பதிவாகியுள்ளது.
இந்த தொடர் முழுவதுமே பிளேஆஃப் ஓவர்களில் பேட்ஸ்மேன்களின் சிரமங்கள் தொடர்கின்றன. தோனியும் ஜொலிக்கவில்லை. 43 வயதான கேப்டன், மீண்டும் ஸ்பின்னர்களின் கொடூரத்துக்கு இரையாகினார். சுனில் நரேன் அவரை எல்.பி.டபிள்யூ மூலம் அவுட்டானார். ரிவியூ எடுத்தபோதிலும் பயனளிக்கவில்லை.
இன்றைய போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட்க்குப் பதிலாக களமிறக்கப்பட்ட ராகுல் திரிபாதி, குறுகிய நேரமே க்ரீஸில் நிலைத்தார். KKR-யின் ஸ்பின்னர்கள், சேப்பாக்கம் பீட்சின் தன்மையை திறமையாக பயன்படுத்தி, சிஎஸ்கே பேட்டிங் வரிசையை முழுவதுமாக அடக்கினர்.
வருண் சக்ரவர்த்தி, மொயின் அலி, சுனில் நரேன் ஆகிய மூவரும் சேர்ந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது சேப்பாக்கத்தின் நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.
இன்று தோல்வி அடைந்தால் சிஎஸ்கே-க்கு தொடர்ந்து மூன்றாவது சொந்த மைதானத்தில் கிடைக்கும் தோல்வியாகும். ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, தங்களது கோட்டை என அறியப்படும் சேப்பாக்கத்தில், சிஎஸ்கே மூன்று தொடர் தோல்விகள் என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருக்கும்.