எல்லா ஊரிலும் மஞ்சள் ஜெர்ஸி தான்.. ஆதிக்கம் செலுத்தும் தல தோனி..!

Published:

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடினாலும் சரி சென்னையை தாண்டி விளையாடினாலும் சரி அந்த மைதானத்தில் மஞ்சள் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர் என்பதும் இது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தங்கள் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியும் வேறொரு மைதானத்தில் ஒரு போட்டியும் நடைபெறும் என்பது தெரிந்ததே. ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை விளையாடும் அனைத்து மைதானங்களிலும் சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

dhoni 1

சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிராக நடந்த போட்டியில் மஞ்சள் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். அதேபோல் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவை ஆச்சரியப்படும் அளவுக்கு வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகபட்சமாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஈடன் காடன் மைதானத்தில் நடந்த போது எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஜெர்ஸி தான் காணப்பட்டது. சென்னையில் நடந்த போட்டி குறித்து சொல்லவே தேவையில்லை.

இதனை அடுத்து சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்துமே ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து வருவதற்கு ஒரே காரணம் தல தோனி என்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி இரண்டு பந்துகளில் அவர் விளையாட வந்தால் கூட மைதானத்தில் உள்ள ரசிகர்களின் கரகோஷன் விண்ணை தொடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ms dhoni ravindra jadeja

மேலும் சென்னை அணிக்காக கேப்டன் சில முக்கிய முடிவுகளை தோனி எடுத்து வருகிறார் என்பதும் அவரது சிறப்பான கேப்டன்ஷிப் தான் தொடர் வெற்றிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ரிவ்யூ எடுப்பதில் அவரைப் போன்று வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவது வேறு யாருமே இல்லை என்றும் நேற்று ரிவ்யூ எடுத்தபோது கூட மிகச் சரியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தோனி என்ற ஒரே ஒரு நபரின் ஆதிக்கம் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துவரும் வரவேற்பு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டுடன் தல தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த ஆண்டும் இதே போல் அனைத்து மைதானத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...