இத நெருங்கவே மத்த டீம் யோசிக்கும்.. மும்பை, சிஎஸ்கே நட்புக்கு இலக்கணமாக ஐபிஎல் கண்ட அற்புதம்..

By Ajith V

Published:

எப்போதுமே ஐபிஎல் சீசன் வந்து விட்டால் அனைவரின் பார்வையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மீதுதான் இருக்கும். இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரை தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ள நிலையில் அடுத்தடுத்து சீசனின் போது யார் கோப்பையை கைப்பற்றி அதிக முறை சொந்தமாக்குகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு அந்த அளவுக்கு ஒரு திரில்லாக இருக்கும்.

ஆனால் இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மோதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சிஎஸ்கே அணி 2021 மற்றும் 23 ஆகிய ஆண்டுகளில் நடந்த கோப்பையை கைப்பற்றிய இருந்தாலும் அவை மும்பை அணிக்கு எதிராக நிகழவில்லை. அதேபோல 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பிறகு நான்கு சீசன்களிலும் இறுதிப் போட்டிக்கு ஒரு முறை கூட முன்னேறவில்லை.

கடந்த சீசனில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடும் வாய்ப்பு மும்பை அணிக்கு உருவாகியிருந்த போதும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து அவர்கள் வெளியேறி இருந்தனர். இந்த சீசனிலும் இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டியில் மோதும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு லீக் சுற்றிலேயே ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த நிலையில் மும்பை அணி பரிதாபமாக பத்தாவது இடத்தையும் பிடித்திருந்தனர். 2022 ஆம் ஆண்டிலும் பத்தாவது இடத்தை அவர்கள் பிடித்திருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த சீசனில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் என வந்து விட்டாலே எதிரிகள் போல பார்க்கப்படும் இந்த இரண்டு அணிகளும் கடந்த மூன்று சீசனில், ஒரு ஒற்றுமையான விஷயத்தையும் செய்திருந்தது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் ஒன்றாக வெளியேறி இருந்தது. அதே வேளையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் பிளே ஆப்பிற்கு முன்னேற்றம் காண இந்த சீசனில் இரண்டு அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி அனைத்து விஷயங்களுமே ஒன்றாக செய்து வரும் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இருக்கும் மற்றொரு சூப்பரான ஒற்றுமையை தான் தற்போது பார்க்கப் போகிறோம். கடந்த 2013, 15 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் தான் குவாலிஃபயர் 1 போட்டியில் மோதி இருந்தது.

இப்படி மூன்று முறை குவாலிஃபயர் 1 போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் இவை மட்டும்தான். மற்ற எந்த அணிகளும் ஒரு முறை தாண்டி நேருக்கு நேர் குவாலிஃபயர் 1 போட்டியில் மோதியது கிடையாது. ஐபிஎல் தொடரின் பங்காளிகள் என மும்பை மற்றும் சென்னை அணிகளை ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தாலும் இப்படி சில ஒற்றுமையான விஷயங்கள் அவர்களுக்கு இடையே மட்டும்தான் உள்ளது என்பதும் சிறப்பம்சமான விஷயம் தான்.