இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை பார்க்க வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியும், 2வது போட்டியில் இந்திய மகளிர் அணியும் வெற்றி பெற்றன.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் அனைத்து தரப்பிற்கும் இலவச அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து மைதானத்தில் 45 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தார்கள் என்பதும் பெண்கள் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவு வருகை தந்தது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது t20 கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகளை காண வரும் ஆண்களுக்கு கட்டணம் உண்டு என்றும் பெண்களுக்கு மட்டும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகளை காண வருவதற்காக இந்த இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.