பிரபல நடிகையை திருமணம் செய்யும் கே.எல்.ராகுல்.. திருமண தேதி என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் அவரது திருமண தேதி ஜனவரியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி…

kl rahul athiya shetty1 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் அவரது திருமண தேதி ஜனவரியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல் ராகுல் என்பதும் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kl rahul athiya shetty 1இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை கடந்த மூன்று வருடங்களாக கேஎல் ராகுல் காதலித்து வரும் நிலையில் இவர்களது திருமணம் ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கேஎல் ராகுல் குடும்பத்தினர் கூறியபோது ஜனவரி 21 அல்லது ஜனவரி 23 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மணமகள் அதியாஷெட்டியின் தந்தையாகிய சுனில் ஷெட்டி மும்பையில் தனது இல்லத்திலேயே திருமணத்த நடத்த திட்டமிட்ட இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதற்காக சுனில் ஷெட்டி தனது இல்லத்திலேயே திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.