10வது ஃபைனல், 4 கோப்பைகள்.. இந்த ஆண்டு சரித்திரம் படைக்குமா சிஎஸ்கே?

Published:

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே ரசிகர்களுக்கு விருப்பமான அணி என்றும் அந்த அணி வெற்றி பெறும் போது எல்லாம் ரசிகர்கள் அந்த அணியை கொண்டாடி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

csk pathirana சென்னைக்கான அணி என்பதையும் தாண்டி தோனி இந்த அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பது தான் இந்தியா முழுவதும் இந்த அணி ரசிக்கப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத அணியாக மும்பை மற்றும் சென்னை அணி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மும்பை, சென்னை அணிகள் நல்ல வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மீண்டும் இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதி போட்டியில் நான்கு முறை மோதியுள்ளது என்பதும் அதில் ஒரே ஒரு முறை தான் சென்னை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய நான்கு ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ள சென்னை அணி இந்த ஆண்டும் இறுதி போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களுக்கும் உள்ளது.

csk winமேலும் சென்னை அணி இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடும் அளவுக்கு தங்கள் வீரர்களை தயார்படுத்தி வைத்துள்ளது என்பதும் பேட்ஸ்மேன்களை பொருத்தவரை கான்வே, ருத்ராஜ், அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி உள்ளிட்டவர்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை பதில பத்திரனா, தேஷ்பாண்டே, ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த சில போட்டிகளில் சென்னை சூப்பர் கிங் அணி வீரர்களின் பில்டிங் நன்றாக உள்ளது. எனவே சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல தகுதியான அணியாகவே கருதப்படும் நிலையில் ரசிகர்களின் கனவு ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...