பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!

By Bala Siva

Published:

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும் இதில் ஆஸ்திரேலியா மற்றும் ஏதாவது ஒரு அணி மோதும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் முதலில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து 189 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 200 ரன்களும் அலெக்ஸ் கேரி 111 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தென்னாப்பிரிக்கா விளையாடிய நிலையில் அந்த அணி 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...