வரும் 25ம் தேதி சூரியகிரகணம்…மறந்துடாதீங்க… 10 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்..!

By Sankar Velu

Published:

வரும் திங்கள்கிழமை அக்.24ம் தேதி அன்று தீபாவளி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 25ம் தேதி சூரியகிரகணம் வருகிறது. அன்று மாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் மாலை 6.15 மணிக்கு மேல் கொடியேற்றப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் இந்த கிரகணம் ஒரு அபூர்வமானது. இந்த காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகாரம் செய்வது உத்தமம்.

Parikaram
Parikaram

இவர்கள் மட்டைத் தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். மற்ற ராசிக்காரர்கள் சூரியபகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவுமே அருந்தக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்துக் கொள்ள வேண்டும்.

இது ஒரு பகுதிநேர சூரியகிரகணம். இந்தியாவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிரகணம் முடிவடைவதால் பார்க்க முடியாது. குறிப்பாக வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. அதற்குரிய கண்ணாடிகளை அணிந்து பார்க்கலாம்.

solar glass
solar glass

ஜோதிட ரீதியாக பார்த்தோமானால் ராகுவின் சாரம் பரணி 2ம் பாதத்திலும் கேதுவின் சாரம் சுவாதி 4ம் பாதத்திலும் நிற்கிறது. அக்.25ம் தேதி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் இணைந்து சுவாதி நட்சத்திரத்தில் சந்திக்கும்போது தான் இந்த சூரியகிரகணம் ஏற்படுகிறது.

பொதுவாக சந்திரகிரகணத்தை விட சூரியகிரகணம் சக்தி வாய்ந்தது. இந்த நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது. நீராகாரம் கூட அருந்தக்கூடாது. முடிந்தவரை குலதெய்வம் மற்றும் முன்னோர்களையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லாதீங்க.

கிரகணம் முடிந்ததும் நீரில் மஞ்சள் பொடி கலந்து வீட்டை சுத்தம் செய்யலாம். கிரகண நேரத்தில் வீட்டில் உள்ள உணவுப்பொருள்களில் தர்ப்பைப் புல் போட்டு வைக்க வேண்டும். கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும்.

சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்…!

ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள், சிவபுராணம், ருத்ரம் ஆகியவற்றைச் சொல்லலாம். அப்படி சொல்ல முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். அபிராமி அந்தாதியும் சொல்லலாம்.

Leave a Comment