கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

கடன் கழுத்தை நெரிக்கும்னு சொல்வாங்க. இப்பல்லாம் உயிரையே எடுக்கு. அதில் இருந்து மீள என்னதான் வழி? வாங்க பார்க்கலாம். முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில்…

loan

கடன் கழுத்தை நெரிக்கும்னு சொல்வாங்க. இப்பல்லாம் உயிரையே எடுக்கு. அதில் இருந்து மீள என்னதான் வழி? வாங்க பார்க்கலாம்.

முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் உறுதியாக இருந்தாலே நமது கடன்களை சீக்கிரம் அடைத்துவிட முடியும். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் குறிப்பிட்ட நாட்களில் கடனை திருப்பி அளிக்க ஆரம்பித்தால் நீங்கள் வாங்கிய கடனை மிக விரைவிலேயே அடைத்துவிட முடியும் அது என்ன நேரம் மற்றும் நாட்கள் என்று பார்க்கலாம்.

முதலில் நீங்கள் வாங்கியுள்ள கடனை செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் (காலை 6 மணியிலிருந்து-7 மணிக்குள், அல்லது மதியம் 1 மணியிலிருந்து -2 மணிக்குள்) திரும்ப கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம். கடன் வாங்கும் நிலைமையும் ஏற்படாது.

அடுத்து கேது மற்றும் செவ்வாய் இணைந்த நேரமான மைத்ர முகூர்த்த நேரமும் கடனை அடைக்க சிறந்த நேரம். அதேபோல ஞாயற்றுக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரக்கூடிய சதுர்த்தி திதியும் கடனை அடைக்க சிறந்த நாள.
கடனை அடைக்க உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் எது என்றால் கரிநாள் ஆகும். ஒரு மாதத்தில் 2 அல்லது 3 கரிநாட்கள் வரும் அந்த நாட்களை நீங்கள் வாங்கிய கடனை திரும்பிக்கொடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். கடனை அடைக்க மரண யோக நாட்களும் சிறந்த நாட்கள்.

மேலும் சில நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களிலும் கடனை அடைப்பது மிகசிறந்த பலனை அளிக்கிறது. அவை என்னென்ன நட்சத்திரங்கள் என்றால் அஸ்வினி மற்றும் அனுஷம் ஆகிய 2 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடனை திரும்ப கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம்.

கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, விசாகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் வரும் நாட்களில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். குரு சர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும்போது கடனை வாங்க கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க கூடாது. கடன் வாங்குவதாக இருந்தால் ஆன்மிகத்தின் படி, திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடனை வாங்கலாம். இந்த கிழமைகளில் நீங்கள் பணத்தை வாங்குவதன் மூலம் கடனை சீக்கிரமே கொடுக்கலாம்.