ஏதாவது ஒரு ஆன்மிக சம்பந்தமான விஷயத்தைப் பற்றிக் கேட்டால் போதும். இப்ப உண்மை என்னன்னா என பலரும் பீடிகையோடு பேசுவார்கள். ஆனால் ஒரு விஷயம்…தெரியாத வரைதான் மனிதன் ஆர்வத்துடன் அங்குத் தேடத் தொடங்குவான்.
கடவுளையும் கூட. அவரும் நேரில் வந்துவிட்டால் அட போப்பா…எப்பப் பார்த்தாலும் இங்கேயே வந்து நிக்குறன்னு சொல்லி போய்க்கொண்டே இருப்பான். இங்கு நச்சென்று நாலு வார்த்தைகள் தான். ஞானம் என்றால் என்ன? சிதம்பர ரகசியம் என்றால் என்னன்னு பிரம்ம சூத்திரக்குழு புட்டு புட்டு வைக்கிறது. சுருக்கமாகப் பார்க்கலாம்.
உன்னைத் தேடும்போது நீ நன்மை செய்வாய். உலகத்தைத் தேடும்போது நன்மையும் தீமையும் செய்வாய். நீ யாருன்னு தேடு. மனித உறவுகளை அற்று இருப்பவர் தான் சித்தர். உன்னைப் பற்றிப்படிக்காமல் உலகத்தைப் பற்றி படிப்பதில் எந்தப் புண்ணியமும் இல்லை.
எல்லாவற்றிலும் ஆணும், பெண்ணும் சேர்ந்தது தான் சிவலிங்கத்தின் தாத்பரியம். உலகநாடுகளின் மையப்பகுதி சிதம்பரம். இதை விஞ்ஞானிகள் தற்போது தான் கண்டறிந்துள்ளனர். சிவபெருமான் காலூன்றும் இடம் தான் அந்த தில்லை. கிருஷ்ணஸ்ரீ காளஹஸ்தி கோவிலைக் கட்டினார்கள். பல்லவர்கள் காஞ்சிபுரத்தைக் கட்டினார்கள். சோழ அரசர்கள் தஞ்சை பெரிய கோவிலைக்கட்டினார்கள்.
இன்று மேப்பை எடுத்துப் பார்த்தோமானால் இந்த மூன்றுமே ஒரே நேர்க்கோட்டில் உள்ளது. விஞ்ஞானம் கண்டறியப்படாத காலகட்டங்களில் இதை எப்படி கட்டியிருப்பார்கள்? அன்னைக்கு எப்படிப்பட்ட அறிவாளி இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
ஆதியில் இருந்த மன்னர்கள் எல்லாம் ஞானிகளாக இருந்தனர். அப்போது அவர்களுக்கு உலகில் உள்ள உண்மைகள் எல்லாம் தெரிந்தது. அதனால் தான் இவ்வளவு பெரிய சாதனைகளை எல்லாம் படைத்து இருக்கிறார்கள்.
சிதம்பரத்தின் ரகசியம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும். இதற்கு போகம், இன்பம் என்று பெயர். ஒரு பெண்ணின் உடலும், ஆணின் உடலும் இணையும்போது இன்பம். ஆனால் ஒரு ஆணின் உடலில் பெண் இருக்கிறாள். ஒரு பெண்ணின் உடலில் ஆண் இருக்கிறாள். ஆனால் ஒரே உடலில் உள்ள பெண்ணும், ஆணும் இணைந்தால் அது ஞானம்.
ஆடல்கலை 64. மனிதனின் மூச்சு இது ஆடல்கலை 64. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை 16 கலை. அதே மாதிரி வலது மூக்கில் இருந்து வலது கால் கட்டை விரல் வரை 16 கலை.
இரண்டும் சேர்ந்து போனால் 32 கலை. மொத்தம் 64 கலைகள். இது தான் மனித வாழ்வு. 64 கலை தியானம் உடலுக்குள் நடந்தால் இந்த சுவாசமானது உடலுக்குள் நடனமாடும். இதுதான் ஆகாயத்து நடனம்.
நடனமாடும்போது ஆணும் பெண்ணும் இல்லை. அது போல் தான் ஆகாசத்திலும் உள்ளது. இந்த ஆகாச நடனம் தான் சிதம்பரத்தில் உள்ளது.
ஜீவசமாதிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை பண்றாங்க. அது எதனால் என்றால் ஆணும் பெண்ணும் ஐக்கியமாகி விட்டது என்று பொருள். அதனால் தான் எல்லா ஜீவசமாதிகளிலும் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது.