பைக் ஸ்டண்டில் பட்டைய கிளப்பும் ரக்சன்!!! இணையத்தில் வைரல்;

By Vetri P

Published:

தற்போது தமிழ் ரசிகர்களிடையே மிகவும் எண்டர்டெயின்மெண்ட் ஸ்லோவாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி. இதில் கோமாளிகள் மற்றும் செப்ஸ்கள் என பலரும் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்று இருந்தாலும் அவர்களை தாண்டி அதிகளவு பேசப்படுபவர் ஆங்கராக உள்ள ரக்சன் தான்.

ஏனென்றால் இவர் கடந்த மூன்று சீசன்களாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆங்கராக தொகுத்து வழங்கிக் கொண்டு வருகிறார். இதற்கு முன்னதாக கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சிகள் ஆங்கராக தோன்றி விஜய் டிவியில் தனக்கென உரிதான இடத்தினை தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.

மேலும் இவரின் திறமைக்கு ஏற்றபடி மலையாளத்தின் ஃபேமஸ் நடிகராக உள்ள துல்கர் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அந்த வாய்ப்பின் மூலம் வெற்றியையும் கண்டுள்ளார்.

அதன்படி இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் நடிப்பையும் தாண்டி பைக் ஸ்டண்டுகளில் ஆர்வம் உள்ளவராக காணப்படுகிறார்.

அதற்கு உதாரணமாக தான் பைக் ஸ்டண்டு செய்யும் வீடியோவினை பதிவிட்டு அதனை தனது instagram பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனைப் பார்க்கும் அவரது ரசிகர்கள் வாவ் என்று கமெண்ட் செய்து கொண்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Cfj49xdBlVR/?utm_source=ig_web_copy_link

Leave a Comment