அன்;புன்னா என்ன? சிவம்னா என்ன? அன்பே சிவம். சிவமே அன்பு என்று விளக்கம் சொல்வதுண்டு. நமக்கு அந்த அன்பு யாரிடம் வருகிறது? நமக்குப் பிடித்தவர்களிடம் தான் வருகிறது. அதனால்தான் சிவனை எல்லாருக்கும் பிடிக்கிறதோ என்று கேட்கலாம். அதுவும் ஒரு காரணம்தான். அன்பின் உருவாகவே நாம் எல்லோரும் சிவபெருமானைப் பார்த்து பரவசப்படுகிறோம். அப்படிப்பட்ட புனிதமான சிவத்தை நாம் உணர்ந்து இருக்கிறோமா என்றால் பலரும் பதில் சொல்வதில்லை. கோவிலுக்குப் போறோம். சாமி கும்பிடறோம். மன நிம்மதி கிடைக்குது.
அதுக்கு என்ன காரணம்னு கேட்டா சொல்லத் தெரியாது. அது சரி. அந்தவகையில் சிவம்னா என்ன? இதற்கு இவ்ளோ விள்கம் இருக்கிறதா என்று நாம் ஆச்சரியப்படத்தக்க வகையில் பிரபலம் ஒருவர் விளக்கம் தந்துள்ளார். வாங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
ஒரு கோவிலுக்குப் போய் சிவபெருமானை நாம் வழிபடுகிறோம். அல்லது அவரது நாமத்தை சொல்கிறோம். அல்லது அவர் வரலாற்றைப் படிக்கிறோம். அடியார்கள் எழுதிய பாடல்களைப் பாடுகிறோம். இதெல்லாம் எதற்காகன்னு யாருக்காவது தெரியுமா?
நாம என்ன நினைக்கிறோம்னா நமது வேண்டுதல்களைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான் என்று. ஆனால் அடியார்கள் நமக்கு அப்படி சொல்லவில்லை. சிவம் என்பது ஒரு அனுபவம். அந்த சிவத்தை நாம் எப்போது அனுபவிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது சிவம் என்பது என்ன என்று உணர உணர வெளியே இருக்கிற சிவத்தை நமக்குள்ளே பார்க்கக்கூடிய ஒரு உன்னதமான ஆனந்த அனுபவம் அப்படிங்கறது நமக்குக் கிடைக்கும்.
அன்பு என்பதுதான் சிவம். சிவம் என்பதுதான் அன்பு. இதைத் திருமூலர் தன்னோட திருமந்திரத்துல மிக அழகாகச் சொல்லி இருக்கிறார். ”அன்பும் சிவமும் இரண்டென்ப அறிவிலார். அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார். அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின், அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே..!” என்று எளிமையாகச் சொல்லி இருக்கிறார் திருமூலர். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



