ஆசையை நிறைவேற்றவா பக்தி..? கடவுள் எப்போது நேரில் வருவார்?

நாம் செய்யும் எல்லாச் செயல்களும் எளிதாக முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. சில காரியங்களைச் செய்யும்போது இடையூறுகள் வருவது இயல்புதான். அப்படி வரும்போது சோர்ந்து போய் விடக்கூடாது. மனம் தளர்ந்து விடக்கூடாது. அவற்றை…

நாம் செய்யும் எல்லாச் செயல்களும் எளிதாக முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. சில காரியங்களைச் செய்யும்போது இடையூறுகள் வருவது இயல்புதான். அப்படி வரும்போது சோர்ந்து போய் விடக்கூடாது. மனம் தளர்ந்து விடக்கூடாது. அவற்றை எதிர்கொண்டு முயற்சியில் உறுதியாக நின்று முன்வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் வெற்றி அடைவது உறுதி.

சூழ்நிலை சரியில்லை என்றால் மனம் தளர்ந்து விடக்கூடாது. உங்கள் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால் யாரோ ஒருவராக கடவுளே நேரில் வந்து உங்களுக்கு உதவுவார்.

வரிகளைச் சுமந்தால் தான் அது கவிதை. வலிகளைச் சுமந்தால் தான் அது வாழ்க்கை. காயங்களைச் சுமந்தால்தான் அவன் மனிதன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சில நேரங்களில் உங்களை மிகவும் காயப்படுத்தும் விஷயங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடங்களைக் கற்பிக்கின்றன. நீங்கள் வேண்டும்போது கடவுள் கேட்கிறார். நீங்கள் கேட்கும்போது கடவுள் பேசுகிறார். நீங்கள் நம்பும்போது கடவுள் செயல்படுகிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நமக்கு என்று 4 பேராவது வேண்டும் என்று பழகுங்கள். நான்கு விதமாகப் பேசுபவரிடம் பழகக்கூடாது. அவர்களை விட்டு விலக வேண்டும். நயவஞ்சகர் என்றால் 4 அடி தள்ளியே இருக்க வேண்டும். எப்பவும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். உங்களிடம் யாரெல்லாம் நடிக்கிறார்களோ அவர்களை உங்களால் நிறுத்த முடியாது.

ஆனால் அவரை நம்புவதை நிறுத்த முடியும். நமக்கு மற்றவரிடம் இருந்து கிடைக்கும் நல்லவர் என்ற பட்டம் எல்லாம் அவரிடம் நம் உறவு தொடரும் வரை மட்டும் தான். ஆசைக்கு அடங்கிப் போவதே மிகப்பெரிய பாவம். திருப்தி இன்மையே மிகப்பெரிய துயரம். தேவைகளையும், ஆசைகளையும் அளவுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை சோகங்களின் சுமைதாங்கி ஆகாது. ஆசையைத் தொடர்ந்து செல்பவன் அமைதியும் இன்பமும் அடைய மாட்டான் என்கிறது பகவத் கீதை. பக்தி என்பது நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தத் தான். நிறைவேற்ற அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விழுந்தால் அழாதே. எழுந்திரு. தோற்றால் புலம்பாதே. போராடு. கிண்டல் அடித்தால் கலங்காதே. மன்னித்து விடு. தள்ளினால் தளராதே. நஷ்டப்பட்டால் நடுங்காதே. நிதானமாக யோசி. ஏமாந்து விட்டால் ஏங்காதே. எதிர்த்து நில். நோய் வந்தால் நொந்து போகாதே. நம்பிக்கை வை. கஷ்டப்படுத்தினால் கலங்காதே. கதறாமல் இரு. உதாசீனப்படுத்தினால் உளறாதே. உயர்ந்து காட்டு. கிடைக்காவிட்டால் குதிக்காதே. அடைந்து காட்டு என்னும் சுவாமி விவேகானந்தரின் வழி நடப்போம்.