வேண்டும் செல்வம் உங்களுக்கு கிடைத்திட லட்சுமி குபேர பூஜை பண்ணுங்க…

By Sankar Velu

Published:

மகாலெட்சுமியின் வழிபாடு என்பது நம் நாட்டில் தொன்று தொட்ட பழக்கங்களில் ஒரு வழிபாடு. செல்வம் சேர வேண்டும் என்பதற்கு நாம் செய்யும் வழிபாடு. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை மகாலெட்சுமிக்கு மிகவும் விசேஷமான நாள்.

அன்று லட்சுமி பூஜை செய்யலாம். லட்சுமி குபேர பூஜை என்றும் சொல்லலாம். குபேரன் அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவர். வடக்கு திசைக்கு அதிபதி. இவர் சிவபெருமானின் நெருங்கிய நண்பர். தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற சிவனிடம் வந்து கேட்கிறார்.

மகாலெட்சுமியை வழிபட சொல்கிறார். அதற்கு எந்திரம் செய்து அதற்கு ஏற்ப எண்கள் அமைத்து வழிபடும் முறை தான் இந்த குபேர பூஜை.

Diwali 2022 1
Diwali 2022

இதை எப்படி எளிய முறையில் வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தீபாவளி தோறும் இந்த பூஜை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாலெட்சுமியின் திருவுருவப்படம், (அஷ்டலெட்சுமி திருவுருவம்), லட்சுமியும், குபேரரும் சேர்ந்த விக்கிரகம், விநாயகர், (மஞ்சள் பிடித்தும் வைக்கலாம்) 2 குத்து விளக்கு, (குபேர விளக்கு, மண்விளக்கு, அகல் விளக்கு என எதுவும் வைக்கலாம்.)

Kubera enthiram
Kubera enthiram

எந்திரம் ரெடிமேடா லிற்கிறது. இது தான் குபேர எந்திரம். 9 நாணயங்களை குபேர எந்திரத்தில் வைக்க வேண்டும். எண்களை மறைக்கக்கூடாது. வடக்கு திசையைப் பார்த்த வண்ணம் படங்களை வைக்க வேண்டும். வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, ஒரு எலுமிச்சை, ஆப்பிள் வைக்கலாம்.

kuberan
kuberan

இனிப்பு சம்பந்தப்பட்ட எந்த பொருளும் வைக்கலாம். சிகப்பு அவல், சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் போட்டு செய்வது ரொம்பவும் விசேஷம். துளசி, தாமரை மலர்கள், குங்குமம், நாணயங்கள் (ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.)

தம்பதி சமேதராக அமர்ந்து இந்த பூஜையை செய்வது மிக மிக விசேஷம். குடும்பத்தோடு அமர்ந்து செய்யலாம்.

பௌர்ணமியிலும், வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் செய்யலாம். இந்த பூஜை செய்வதால் செல்வம் சேர்வதோடு உடல் ஆரோக்கியம் மேம்படும். நற்குணங்கள் மேலோங்கும்.

 

 

Leave a Comment