அமாவாசை திதி என்பது முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தது. எல்லா அமாவாசையையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையையாவது கடைபிடியுங்கள். இவை மூன்றும் சிறப்பானது. அதிலும் ஆடி அமாவாசையும், புரட்டாசி அமாவாசையும் தட்சிணாயணம் புண்ணிய காலத்தில் வரக்கூடியது. இந்த ஆடி அமாவாசை 28.2.2022 அன்று (நாளை) வருகிறது.
இந்த அமாவாசைகளில் நம் முன்னோருக்குச் செய்ய வேண்டிய கைங்கரியங்களை முறையாக செய்யும்போது வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தை பேறின்மை, கடன் பிரச்சனை, தீராத நோய் என பல பிரச்சனைகள் இருந்தாலும் இவை வெயில் பட்ட பனி போல விலகி விடும்.
புனித நீராடல், சிவாலய தரிசனம், தர்ப்பணம் முறையாக செய்தல், அன்னதானம் செய்தல் மிக மிக முக்கியம். ஆற்றங்கரை, கடற்கரை, புனித தலங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.
வீட்டில் படையல் போட்டு வழக்கம்போல கடைபிடித்தாலும் போதுமானது. அன்று பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ரொம்பவே சிறப்பானது. குல தெய்வ வழிபாட்டை இந்த நாளில் மிகவும் உத்தமம். இது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. எண்ணற்ற சக்திகள் வாய்ந்த நாள் இது.
தர்ப்பைப் புல்லுக்கு ஆற்றல் அதிகம். சூரிய சந்திரர்கள் ஒரே அதனால் தான் எள்ளும் தண்ணீரும் இறைக்கும்போது கை விரலில் மோதிரமாக இந்தப் புல்லை அணிவித்திருப்பார்கள். ராசியில் பிரவேசிக்கின்ற இந்த நாள் அதி அற்புத சக்தி வாய்ந்தது. பூரணமான நாள். பசித்த வயிற்றுக்கு பசியாற உணவு கொடுப்பது தான் அன்னதானம்.
படையலில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது. தக்காளியை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வாழைக்காய், பலாக்காய் சேர்க்கலாம். இந்த நாளில் எளிதில் ஜீரணமாகாது என்பதற்காக அசைவத்தைத் தவிர்ப்பது நலம். காக்கைக்கு சாப்பாடு வைப்பது ரொம்பவே சிறப்பு.
தியானம் செய்வது, சோடசக்கலை நேரத்தில் தியானம் செய்யலாம். அதாவது அமாவாசை முடிகின்ற கடைசி ஒரு மணிநேரமும், ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு மணி நேரமும் தான் சோடசக்கலை நேரம்.
திருமூர்த்தி பகவானின் அருள்பார்வை படுற நேரம் தான் சோடசக்கலை நேரம். இந்த நேரத்தில் என்ன தேவையோ அதை மனதார கேட்கும்போது கண்டிப்பாக இறைவனின் கருணை நமக்குக் கிடைக்கும். இரவு 11.58க்கு அமாவாசை திதி முடிகிறது.
அந்த வகையில் 10.58லிருந்து 12.58வரை உள்ள 2 மணி நேரம் சோடசக்கலை நேரம். இந்த நாளில் சவரம் செய்தல், முடிவெட்டுதல், நகம் வெட்டுதல் மாதிரியான விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. சித்தர் ஆலயங்களுக்குச் செல்லுதல், அன்னதானம் செய்தல் ஆகியவை சிறப்பான பலன்களைத் தரும். பசுவுக்கு அகத்திக்கீரையும், பச்சரிசி வெல்லமும் கொடுக்கலாம். குலதெய்வ ஆலயத்துக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். இதனால் குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும்.
சின்ன குழந்தைகளை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றால் அவர்களின் வயது எண்ணிக்கையின் அடிப்படையில் விளக்கேற்றுவது உத்தமம். அல்லது 11 என்ற எண்ணின் அடிப்படையில் குலதெய்வ ஆலயத்தில் விளக்கு ஏற்றுவது கண்டிப்பாக நல்ல ஒரு பலனைக் கொடுக்கும்.
பிரபஞ்சத்தில் உள்ள நல்ல அதிர்வுகளை உணர்வதற்கு ஏற்ற நாள். இந்த நாளை யாரும் கடைபிடிக்கத் தவறாதீர்கள். அதன்மூலம் நல்லதொரு பலனைப் பெற்று வாழ்க்கையில் சிறப்பானதொரு நிலையை அடைய வாழ்த்துகிறோம்.