காகத்திற்கு உணவு வைத்து விட்டு அதன்பிறகு சாப்பிடுவதை நம் முன்னோர் வழிவழியாகக் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான விஷயம். இது எதற்காக இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
காகத்துக்கு வைக்கக்கூடிய உணவை பழைய உணவாக வைக்கக்கூடாது. முந்தையநாள் உணவையோ, எச்சில் உணவையோ காகத்திற்கு வைக்காதீங்க. இது தோஷம் ஏற்பட வழி வகுக்கும்.
காகத்திற்கு நாம் உணவு வைப்பதே முன்னோர்களை நினைத்துத் தான். அதே போல காகத்திற்கு உணவு வைத்தால் சனீஸ்வர பகவான் மற்றும் எமதர்மராஜாவிற்கும் வைப்பதற்குச் சமம்.
நாம சமைத்த உணவைத் தினமும் காகத்திற்கு வைத்து விட்டு தான் சாப்பிட வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச்சிறப்பான பலன் நமக்குக் கிடைக்கும். நிம்மதியின்மை, பணப்பிரச்சனை, சூனியம், அடிக்கடி நோய்வாய்ப்படல், வழக்கு விஷயங்கள், குழந்தையின்மை என பல பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும்.
காகத்திற்கு உணவு வைக்கும்போது அதனுடன் தண்ணீரும் சேர்த்து வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. அமாவாசை அன்று மட்டும் எள் கலந்த சாதம் வைக்கலாம். மற்ற நாளில் தயிர் கலந்து வைப்பது ரொம்பவே சிறப்பானது.
இதனால் சனீஸ்வர தோஷம் நீங்கும். தயிர் புதிதாக இருந்தால் மட்டும் வைங்க. சமையலுக்கு மிஞ்சியது போக மீதமுள்ள தயிரையோ அல்லது புளித்துப் போன தயிரையோ இப்படி வைத்து சாதம் செய்யக்கூடாது.
காகம் தினமும் வீட்டுக்கு வரும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது தினமும் சாப்பிடாது. நீங்கள் தினமும் சாப்பாடு வைத்துக்கொண்டே இருந்தாலே போதும். அதுவாகவே தினமும் வர ஆரம்பித்துவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட காகங்கள் வந்து சாப்பிட்டால் ரொம்ப சீக்கிரத்தில் கஷ்டம் போய்விடும்.
உலர் திராட்சையை காகத்திற்கு வைத்தால் நமது பாவங்கள் நீங்கி கஷ்டங்கள் விலகும். அதாவது உலர்திராட்சை கலந்த உணவை வைத்தாலே போதும். இது காகத்திற்கு மிகவும் பிடித்த உணவு. குடும்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.