ஆடி மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கக்கூடிய அழகான நோன்பு வரலட்சுமி விரதம். ஆடிமாதத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விரத நாளும் அம்பாளுக்காக நாம் நோன்பு நோற்று அவளது பலனைப் பெறும் நாள்கள். ஆனால் அம்பாளே ஒரு நாளைச் சொல்லி இந்த நாளில் நீ விரதம் இருந்தால் என்னுடைய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும் என்று அம்பாள் மகாலட்சுமி சொன்ன அழகான விரத நாள்தான் வரலட்சுமி நோன்பு.
சாருமதி என்ற பெண்ணுக்காக மகாலட்சுமியே குறித்துக் கொடுத்த நாள் தான் வரலட்சுமி நோன்பு. பாரம்பரிய முறைப்படி யாரெல்லாம் குடும்ப வழக்கப்படி எடுக்குறாங்களோ அவங்க எல்லாம் இந்த விரதத்தை எடுக்கலாம். விருப்பம் இருப்பவர்களும் தொடர்ந்து செய்வேன் என்ற வைராக்கியம் இருப்பவர்களும் எடுக்கலாம்.
நல்ல கணவன், குடும்பம் மகிழ்ச்சியாக அமைய எடுக்கலாம். ஆண்களும் நல்ல மனைவி அமைய எடுக்கலாம். நோன்பாக இல்லாவிட்டாலும் எளிமையான மகாலட்சுமி வழிபாடாக எடுத்துக்கொள்ளலாம். மகாலட்சுமியின் அருள் செல்வ வளம் தரும். நிம்மதியான வாழ்க்கையைத் தரும். எத்தனை கோடி கொடுத்தாலும் வீட்டுக்குப் போனா நிம்மதியா தூக்கம் வரணும். பிள்ளைகளோட, மனைவியோட மகிழ்ச்சியா வாழணும். அதுதானே வாழ்க்கை.
அந்த நிம்மதியான மகிழ்வான வாழ்வைத் தரக்கூடியவள் அன்னை மகாலட்சுமி. அந்த மகாலட்சுமியின் முழு அருளையும் பெறக்கூடிய ஒரு அற்புதமான விரத நாள்தான் வரலட்சுமி நோன்பு. மகாலட்சுமியின் திருவுருவப்படத்தை எடுத்து சந்தன, குங்குமம் இட்டு, மலர்மாலை சாத்தி எளிய நைவேத்தியம் வைத்து வழிபடலாம். அன்று சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப்பொருள்கள் தருவது சிறப்பு. திருமணவரம், நோயாளிகள், வறுமையின் பிடியில் இருப்பவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலன் தரும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



