மார்கழி மாதத்திற்கே உரிய பெருமாளுக்கே உரிய வைகுண்ட ஏகாதசி பற்றிப் பார்ப்போம்.
எம்பெருமான் நாராயணரை வழிபடக்கூடிய முக்கிய விரதங்களில் மாதந்தோறும் வருவது ஏகாதசி. இதுல மார்கழி மாதத்துல வரக்கூடிய ஏகாதசியைத் தான் வைகுண்ட ஏகாதசின்னு கொண்டாடுறோம். பரமபத வாசல் திறந்து கொண்டாடப்படக்கூடிய ஒரு உன்னதமான விழா. ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, ராப்பத்து சேவையைப் பார்ப்பதற்காகவே ஒரு ஆண்டு முழுவதும் காத்திருப்பார்கள். அவர்கள் வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்வைக் கண்டுகளிப்பர். இந்த வைகுண்ட ஏகாதசி கொண்டாட என்ன காரணம்? இறைவன் ஒரு அடியார் மேல் வைத்த அன்பின் காரணமாகவே கொண்டாடப்படுகிறது.
நாராயணர் எழுந்தருளிய 108 திவ்ய தேசங்களில் முதல் இடம் பிடித்தது ஸ்ரீரங்கம் தான். திருமங்கை ஆழ்வார் கார்த்திகை மாதத்தில் இருந்து பெருமாளை சேவிக்கிறார். பக்தியை மெச்சிய பெருமாள் உனக்கு என்னம்மா வேணும்னு கேட்க, ”பெருமாளே நீ அழகா இங்கு பள்ளி கொண்டு அருள்கிறாய். உனக்காக நான் பாடிய பாசுரங்களைக் கேட்கணும்”னு சொல்கிறார்.
இவர் பாடியதுதான். ஆனால் அது நம்மாழ்வாரின் 1000 பாசுரங்கள். அதனால் ராப்பத்து என்ற காலத்தில் தினம் 100 பாடல்களாக பாடி அதை இயல், இசை, நாடக வடிவமாக மக்கள் பார்க்கறதுக்கு காரணம் திருமங்கை ஆழ்வார். அதே போல நாதமுனிகள் பெருமாளை வழிபட, அவர் முன் தோன்றி ”என்ன வேண்டும் கேள்” என்கிறார்.
”நீ கேட்கும் ராப்பத்து மாதிரி இன்னும் கேட்காமல் நாலாயிரம் பாசுரங்கள் இருக்கே. அதுதான் நாலாயிர திவ்ய பிரபந்தம். அதையும் கேட்கணும்”னு கோரிக்கை விடுக்கிறார். அதுதான் பகல் பத்து ஆகிறது. அதுபோல பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யக்கூடிய அரையர்சேவை உண்டு. பாசுரங்களை பெருமாளுக்கு விண்ணப்பித்தல் தான் இது.
அதாவது இயல் வடிவத்தில் உள்ள பாடல்களை இசை வடிவில் பாடி அதை நாடக வடிவில் நடித்துக் காட்டுதல். இதனால் பெருமாள் ரொம்ப அழகா ஒவ்வொரு நாளும் வண்ணமயமாக காட்சி தருவார். இது ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கத்திலும் விசேஷமாக நடக்கும். பரமபத வாசல் திறப்பும் அருமையாக இருக்கும். பக்தன் என்ன சொல்கிறார்னு இறைவன் கேட்டு பகவான் பக்தனுக்காக இரங்கி வரும் நாள் தான் சொர்க்க வாசல் திறப்பு எனப்படுகிறது.
விரதங்களிலே மிக உன்னதமான விரதம் தான் இந்த வைகுண்ட ஏகாதசி விரதம். இன்று ஒருநாளாவது சாப்பிடாமல் விரதத்தைக் கடைபிடிக்கணும். இதற்கு சுத்த பட்டினி என்பர். இன்று தான் அந்த அற்புதமான விரதநாள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



