பழனி To திருப்பதி ஆன்மீக சுற்றுலா பயணத்தை தொடங்கிய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்… என்னது… கட்டணம் இவ்வளவு தானா…?

By Meena

Published:

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை 1971 ஆம் ஆண்டு உருவக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.

தற்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் ஒன்று ஆன்மீக சுற்றுலா பயணம். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக இயங்குகிறது.

இந்தப் பேருந்து வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படும். வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்படும் இந்த பேருந்து சனிக்கிழமை காலை ராணிப்பேட்டைக்கு சென்றடையும். அங்கு ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் பயணிகள் குளித்து, சாப்பிட்டுவிட்டு திருப்பதிக்கு கிளம்புவார்கள்.

திருப்பதி சென்றடைந்தவுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டின் மூலம் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் சுற்றுலா பயணி நபர் ஒருவருக்கு ஒரு திருப்பதி லட்டு வழங்கப்படும். மதிய உணவை அருந்திய பின்பு பத்மாவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு ராணிப்பேட்டைக்கு திரும்புவர்.

அங்கு ஓட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பழனி வந்தடைவார்கள். இந்த ஆன்மீக சுற்றுலாவிற்கு ரூ. 5000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் சனிக்கிழமை மூன்று வேளை உணவு, சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவை அடங்கும். இந்த ஆன்மீக சுற்றுலாவில் கலந்துக் கொள்ள வேண்டுமெனில் டிக்கெட் முன்பதிவிற்கு வ்வ்வ்.www.ttdconline.com என்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்.

Tags: பழனி