இன்று திருவாதிரை திருநாள்

By Abiram A

Published:

மார்கழி மாதம்தான் அனைத்து விசேட வைபவங்களும் நடைபெறுகிறது. ஆன்மிக ரீதியான திருவிழாக்கள் அனைத்தும் நடைபெறுகிறது.

இந்த மாதத்தில் வரும் முக்கிய திருவிழாதான் திருவாதிரை திருநாள் ஆகும்.

இன்று திருவாதிரை திருநாள் என்பதால் சிவாலயங்களில் இருக்கும் நடராஜருக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் திருவாதிரைக்கு புகழ்பெற்றது.

சிதம்பரத்தில் திருவாதிரையை ஒட்டி தேரோட்டம் நடைபெறும் .

மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.

திருவாதிரை தினத்தன்று விரதமிருந்து நடராஜரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நல்ல கல்வி, செல்வம், கிடைத்து தரித்திர தோஷங்கள் நீங்கி மக்கள் சுகம் பெறுவர் என்பது திண்ணம்.

Leave a Comment