பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?

பைரவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமின்னு தான் பலரும் நினைப்பாங்க. ஆனா அது கிடையாது. சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரம். அந்த அற்புதமான நாள் இன்று தான். அந்தவகையில் இன்று…

பைரவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமின்னு தான் பலரும் நினைப்பாங்க. ஆனா அது கிடையாது. சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரம். அந்த அற்புதமான நாள் இன்று தான். அந்தவகையில் இன்று பைரவரை இரவில் வழிபடுவது சிறப்பு. உங்களுக்கு பல நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

இந்த நன்னாளில் தான் இறைவனே பைரவ அடியவர் வேடத்தில் சிறுத்தொண்ட நாயனாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு பிள்ளைக்கறி கேட்டு வந்தார். அந்த நாயனாரும் சற்றும் மனம் தளராமல் தன் மகன் சீராளனை அரிந்து பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்தார். அத்தகைய செயற்கரிய செயலைச் செய்து தன் பக்தியை சிவபெருமானிடம் நிரூபித்தார்.

மீண்டும் சீராளனை உயிர்ப்பித்துக் கொடுத்து அவரது பக்தியை மெச்சினார் சிவபெருமான். அந்த வகையில் சிறுத்தொண்ட நாயனாரின் பாதம் பதிந்த திருத்தலம் திருச்செங்காட்டங்குடி. இந்த ஆலயத்தில் பிள்ளைக்கறி பிரசாதம் தரப்படுகிறது. சீராளங்கறி என்னும் பிள்ளைக்கறி பிரசாதம், பிள்ளைக்கறி அமுது படையல் விழா இன்று மட்டுமே ஆலயத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை வாங்கி சாப்பிட்டால் உடல் நோய்கள் தீருமாம். புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருச்செங்காட்டங்குடி ஆலயத்தில் சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை என நால்வருக்கும் சன்னதி உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து 18 கிலோமீட்டர், மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர், நன்னிலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது.