முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
இங்கு கந்த சஷ்டி விழா வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அதாவது தீபாவளிக்கு மறுநாளுக்கு மறுநாள். அன்றைய தினம் அதிகாலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. 23 முதல் 26ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அன்று அதிகாலை 5 மணிக்கு யாக சாலை பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தீபாராதனை. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
அங்கிருந்து மதியம் 3 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது.
கந்த சஷ்டியின் 7வது நாளான 28ம் தேதி காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாளின் தவசு காட்சிக்காக மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் செல்கிறார். அங்கு குமரவிடங்க பெருமான் அம்பாளுக்குக் காட்சி கொடுக்கிறார். தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



