திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?

திருச்செந்தூரில் தற்போது மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் திங்கள்கிழமை அன்று தேரோட்டம். வெகு சிறப்பாக இருக்கும். இதன் பின்னணி பற்றி பார்ப்போமா… மாசித்திருவிழா 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கொடி மரம் சந்தன…

திருச்செந்தூரில் தற்போது மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் திங்கள்கிழமை அன்று தேரோட்டம். வெகு சிறப்பாக இருக்கும். இதன் பின்னணி பற்றி பார்ப்போமா…

மாசித்திருவிழா 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கொடி மரம் சந்தன மரத்தால் ஆனது. இந்த மரத்தை வெட்டி கொடிமரம் உருவாக்குவதற்குள் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆறுமுக ஆசாரிக்கு  திருச்செந்தூர் மந்தை அருகில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிடப் போனார்களாம். இந்த அம்மன்
அந்த அம்மன் உன்னைத் தவிர அந்த மரத்தை வெட்டப் போகிறவர்கள் யாராக இருந்தாலும் உயிரோடு திரும்ப மாட்டாங்க. இதை யாருக்கும் நீ சொல்லக்கூடாதுன்னு கட்டளை இட்டதாம். அம்மன் இட்ட கட்டளைப்படி அவர் செய்துள்ளார். பொதிகை மலை உச்சி காக்காச்சி மலையில் கொடிமரத்துக்குத் தேவையான சந்தனமரம் இருந்தது.

அதற்கு 21 மாட தேவதைகள் இருந்தன. யார் வெட்ட வந்தாலும் அவர்கள் ரத்தம் கக்கி இறந்து விடுவார்களாம். வெட்ட வந்த சண்முக அய்யனாரையும் விரட்டி விட்டது. அவருடன் உதவியாக வந்த மந்திரவாதி மரைக்காயர் மரத்தை வெட்ட முயன்று ரத்தம் கக்கி இறந்து போனார்.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனாரிடம் இதுபற்றி சொல்லி உதவுமாறு வேண்டுகிறார். சொரிமுத்து அய்யனனாரும் முருகன் எனது சகோதரர்தான். அதனால் நீங்கள் மரம் வெட்ட வழிவிட வேண்டி 21 மாட தேவதைகளையும் சமாதானம் செய்துள்ளார்.

அதன்பிறகு 21 மாட்டு வண்டிகளில் அந்த மரம் எடுத்துச் செல்லப்பட்டதாம். இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில் தான் இந்த கொடிமரம் உருவானதாம். இப்போதும் திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா நடைபெறும்போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடஹரஹாரனுக்கும் படைத்த உடன் தான் தேர் ஓட வேண்டிய வேலைகளைச் செய்வாங்க. மாசித்திருவிழா தேரோட்டத்தின் போது சங்கடஹரஹாரன் தேர் மீது ஏறி சரி போகலாம்னு சொன்னதும் தான் தேர் ஓடுமாம்.