ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில் நாம் என்ன வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
நாளை ஆடி மாதம் 2 வது ஞாயிறு தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவர் வழிபாட்டுக்குரிய நாள். அதற்கு அடுத்த வாரம் ஆடி அமாவாசை. அதற்கு அடுத்த வாரம் ஆடி மாம் கூழ்வார்க்கும் நாள். அன்று கடைசி ஞாயிறு திருவிளக்கு வழிபாடு செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை பல வீடுகளில் கூழ் காய்ச்சி ஊற்றுவாங்க. விடுமுறையும், விசேஷமும் இணைந்து வருவதால் ஆடி ஞாயிறு என்றாலே கொண்டாட்டம் தான்.
தேய்பிறை அஷ்டமி முழுக்க முழுக்க பைரவரை வழிபட அற்புதமான நாள். அதுவும் ஞாயிறு தான் அவருக்கு உகந்தநாள். அதுவும் ஆடி மாதம் என்பதால் ரொம்பவே விசேஷமானது.
பைரவர் யாருன்னா சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து இந்த உலகத்துக்கு அவதாரம் செய்த அற்புதமான ரூபம். காசிக்கேக் காவலாக நிற்கும் தெய்வம். காசியின் எட்டுத்திக்கிலும் நிற்கக்கூடியவர் தான் அஷ்டபைரவர். அந்த அஷ்ட ரூபத்தில் இருந்து பிரிந்தது தான் 64 பைரவ கோலங்கள். திகம்பர ரூபம் கொண்டவர். ஆடையே இல்லாத ரூபம் தான் திகம்பரர்.
அற்புதமான ஆற்றல் சக்தி படைத்தவர். நமக்கு எல்லாம் காவலாக இருந்து காத்து ரட்சிப்பவர். நமக்கு பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வரக்கூடியவர். இவரைப் பார்த்துப் பலரும் பயப்படுவர். உக்கிரமாக இருக்கிறாரே என்று.
ஆனால் சம்ஹாரத்திற்காக வந்ததால் தான் அந்த ரூபம். ஆனால் அவர் நமக்குக் காவல் தான். சிவன் கோவிலுக்குக் காவலாக இருப்பவர். அதனால் தான் இன்றைக்கும் பைரவ பூஜைகள் நடக்கிறது.
நாம் எங்காவது காட்டுப்பாதையில் சென்றால் சம்பந்தமே இல்லாமல் நாய் வந்து நமக்குப் பாதையைக் காட்டும். அப்புறம் மறைஞ்சி விடும். மிக அற்புதமான கோலம் உடைய அந்த அழகிய பைரவரைத் தான் நமக்குக் காவலாக வைத்துள்ளோம்.
அவருடைய வடிவம் வேணும்னா நாயின் வடிவமாக இருக்கலாம். ஆனால் அதுதானே நமக்குக் காவல் என்று சொல்கிறோம். அதையே தனக்கு வாகனமாகக் கொண்டு அருள்புரியக் கூடிய ஆற்றல் மிக்கவர் தான் பைரவர்.
அப்படிப்பட்டவர் நம்மை எப்படி எல்லாம் பாதுகாப்பார் என்று தெரிய வேண்டும். கோர்ட், கேஸ், வழக்கு, தீராத பழி, தேவையில்லாத பிரச்சனைக்கு ஆளாக்குதல், தீராத கடன், பிரச்சனைகளுக்கு என எதுவாக இருந்தாலும் பைரவர் வழிபாடு செய்யலாம். நம்ம பக்கம் உண்மை இருந்தால் நிச்சயமாக நாம் ஜெயிப்போம்.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை நாம் பைரவரை வழிபடலாம். காரபொரி சாதம், கருப்பு உளுந்து மிளகு வடை, வெல்லம் கலந்த உணவு எதுவானாலும் நைவேத்தியமாக வைக்கலாம்.
எதுவுமே செய்ய முடியாதவர்கள் 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வைத்து வழிபடுங்க. எலுமிச்சம்பழத்தைப் பூஜைக்கு வைத்து கோர்ட், கேஸ் வழக்குகளுக்குச் செல்பவர் அதை எடுத்துச் செல்லலாம்.
பக்கத்துல சிவன் கோவிலில் நாலரை முதல் ஆறரை வரை ராகு காலத்தில் பைரவர் பூஜை நடக்கும். அங்கு நடக்கும் பூஜைக்குரிய பொருள்கள் வாங்கிக் கொடுங்க. அங்குள்ள திரிசூலத்துக்கு எலுமிச்சையை வாங்கிக் குத்தி வைங்க.
நாலு எலுமிச்சையில் 3 எலுமிச்சையை சூலத்தில் குத்தி ஒரு எலுமிச்சையை பூஜையில் வைத்து எடுத்து வாங்க. மனதார நமது பிரச்சனையை பைரவர் முன் சொல்லி அதைத் தீர்த்து வைக்குமாறு வேண்டுங்க. நிச்சயமாக உங்க பக்கம் நியாயமா இருந்தா அந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.