அம்பிகையின் அருள் ஆற்றல், இறை சக்தி அதிகரிக்க வேண்டுமா அப்படின்னா இன்று இதைக் கட்டாயமாகச் செய்யுங்க. ஆடி மாதம் முதல் வெள்ளி இன்று (19.7.2024) தான் வருகிறது. ஆடி மாதம் வந்து விட்டாலே நமக்கு ஒவ்வொரு நாளும் விசேஷம் தான். ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி செவ்வாய்.
இந்த ஆண்டில் நமக்கு முதலாவதாக வருவது ஆடி வெள்ளி தான். அதனால் இந்த ஆண்டு 5 ஆடி வெள்ளி வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு ரூபமாக விளங்கும் அம்பாளை நாம் வழிபாடு செய்யலாம்.
இப்படி வரும் 5 ஆடி வெள்ளிகளில் வரும் 9.8.2024 அன்று கருட பஞ்சமியும், 16.8.2024 அன்று வரலட்சுமி நோன்பும் வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டை நாம் இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.
முதலாவதாக பிரச்சனைகள் தீர நினைப்பவர்கள் ராகு காலத்தில் வெள்ளியன்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். பிரச்சனை இல்லை. மகாலெட்சுமி குடியிருக்கணும். இன்பமயமான வாழ்க்கை வாழணும். மனநிம்மதி வேணும் என்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வழிபடலாம்.
இது ஆடி வெள்ளிக்கு மட்டுமல்ல. பொதுவாகவே எல்லா வெள்ளிக்கிழமை வழிபாடுகளுக்கும் இதைக் கடைபிடிக்கலாம். ராகு காலம் வெள்ளிக்கிழமை பத்தரை, பன்னிரண்டு தான் ராகு காலம். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை என்பது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் உள்ளது. ராகு காலத்தில் வழிபாடு செய்பவர்கள் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். அரளிப்பூவால் அர்ச்சனை பண்ணுங்க.
சுக்கிர ஓரையில் வழிபாடு செய்பவர்கள் மகாலெட்சுமி தாயாருக்கு கல்கண்டு சாதம் நைவேத்தியமாக வைத்து தாமரை மலர்களால் அர்ச்சனை பண்ணி அம்பாளை வழிபடலாம். கோவிலுக்குப் போக முடியாதவர்கள் வீட்டிலேயே இருந்து வழிபடுவது நல்லது.
காலையில் அம்பாளுக்கும், சிவபெருமானுக்கும் சேர்த்து வழிபட வேண்டும். பிரதோஷ விரதம் இருந்தால் இந்த நாளில் மிகச்சிறந்த பலனைப் பெற்றுத் தரும். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷம் அமைந்து இருப்பது விசேஷம்.
தேவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தையே உட்கொண்டு கழுத்தில் தேக்கி வைத்து திருநீலகண்டன் ஆனார். இதுல சகல விதமான தெய்வங்களுக்கும் நாம் செய்யக்கூடிய பூஜை தான் திருவிளக்கு பூஜை.
தொடர்ந்து அம்பாளை வழிபட சகல விதமான சௌபாக்கியங்களும் வீட்டில் உண்டாகும். இந்தத் திருவிளக்கு பூஜையை மாலை கோவிலுக்குச் சென்று இருக்கலாம். ஒரு திருவிளக்கு வழிபாடு என்பது சகல விதமான தேவர்களுக்கும் செய்யக்கூடிய பூஜையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டுக்கு யார் வந்தாலும் 2 வெத்தலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம், 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் நாணயம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொடுங்க.
கொஞ்சம் வசதியானவர்கள் சீப்பு, கண்ணாடி, வளையல், ஒரு ஜாக்கெட் பிட் என மங்கலப்பொருள்களைத் தட்டில் வைத்துக் கொடுக்கலாம். ஆடி மாதம் முழுவதும் செய்தால் ரொம்பவே விசேஷம்.
மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.