திருவோணத்தில் ஒரு முறை விரதம் இருந்தாலே 16 செல்வங்களும் கிடைக்கும். தச அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. திருவோண நட்சத்திரத்தன்று தான் பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அதனால் தான் அந்த நாளில் ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. மாதா மாதம் வரக்கூடிய திருவோணம் நட்சத்திரத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட 16 வகையான செல்வங்களும் கிடைக்கும். இந்த விரதத்தை ஒருமுறை இருந்தாலே அத்தனை செல்வங்களும் கிடைக்கும். 27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை.
பெருமாளுக்கு திருவோணம். இந்த இரு நட்சத்திரங்களுக்குத் தான் திரு என்ற அடைமொழி உள்ளது. திருவோண விரதம் இருந்தால் சந்திர தோஷம் விலகும். இது இருப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். சந்திர தோஷம் முற்றிலும் விலகி மனம் தெளிவடைந்து நல்வாழ்வு கிடைக்கும்.
முந்தைய நாளில் உணவேதும் எடுத்துக் கொள்ளாமல் விரதத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். அன்று இரவு முழுவதும் விஷ்ணுசகஸ்ரநாமம் படிக்கலாம்.
திருவோணம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலையை சாற்றி வழிபட்டு வர வேண்டும். கோவிலுக்குப் போக முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் துளசி கலந்த தீர்த்தம் அருந்தி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். நெய் தீபம் ஏற்ற வேண்டும். மதியம் உப்பு சேர்க்காத உணவை சாப்பிட வேண்டும்.
இது பெருமாளின் அருளாசியைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. மாலை அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்குரிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரவு பாலும், பழமும் சாப்பிட்டு விட்டு விரதத்தை முடிக்க வேண்டும். தொடர்ந்து இந்த விரதத்தை நம்பிக்கையுடன் கடைபிடிப்பவர்களுக்கு பெருமாளின் அனுக்கிரகம் கட்டாயம் கிடைக்கும்.
காலை வழிபாடு நமக்குள்ள நோய்களைக் குணமாக்கும். மதிய வழிபாடு 16 வகையான செல்வங்களைப் பெற்றுத் தரும். மாலை வழிபட்டால் நமது பாவங்கள் நீங்கும். இரவில் வழிபட்டால் முக்தி கிடைக்கும். இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் நமக்கு எல்லாவித ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சரியான முறையில் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் வைகுண்ட பதவியை அடைவார்கள். முக்கியமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி இன்பமான வாழ்வு கிடைக்கும்.
இந்த ஆண்டு திருவோணம் இன்று (செப்டம்பர் 14) இரவு 8.32 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 15 மாலை 6.49 மணிக்கு முடிகிறது. திருவோணத்தில் அத்தப்பூ கோலமும், கலர் பொடியை முகத்தில் தூவி உற்சாகத்தில் திகழ்வதும், மகாபலி என்னும் அரக்கனுக்கு விஷ்ணு பாடம் கற்பிக்க வாமன அவதாரம் எடுத்தார். தொடர்ந்து அவனது பக்தியை மெச்சி திருவோணத்தில் பூமிக்கு அவன் வருகை தர வரம் கொடுத்தார். கேரளத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது தான்.