கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வரவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் கணிசமான அளவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதாலும், வைகாசி மாத பௌர்ணமி கிரிவலமும் ரத்து என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைகாசி பவுர்ணமி வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.52 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 2.42 மணிக்கு நிறைவடைகிறது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் பஸ், ரெயில்கள், கார்கள் இயக்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வரவேண்டாமென கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.