விஷ்ணு பகவான் தசாவதாரம் அல்லாத பல அவதாரம் எடுத்திருப்பதாய் புராணங்கள் சொல்கின்றது. அதில் ஒன்றுதான் சீனிவாசன் அவதாரம். சீனிவாசனாய் விஷ்ணு பகவான் அவதரிக்கும்போது அவருக்கு மனைவியாய் அலர்மேலுமங்கையாய் மகாலட்சுமி அவதரித்தாள். ஆகாசராஜன் ஏர் உழும்போது கிடைத்த பெட்டியில், ஆயிரம் இதழ்க்கொண்ட தாமரை மலர்மீது கிடந்தமையால் அலர்மேல் மங்கை எனப்பெயரிட்டு வளர்த்தான். ‘அலர்’ என்றால் தாமரை, ‘மங்கை’ என்றால் நற்குணங்கள் பொருந்திய பெண். தாமரை மலர்மீது நற்குணங்கள் பொருந்திய பெண்ணாக வீற்றிருப்பவள் என்ற பொருளில் அலர்மேல்மங்கை என்று அழைக்கின்றனர். வடமொழியில் பத்மம் என்றால் தாமரை, வதி என்றால் ஆசனம், படுக்கை.. தாமரையில் கிடந்தவள் என்னும் பொருள்படும்படி பத்மாவதி என்றும் அழைப்பர்.
சொத்து பணம் பற்றிய குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதில் வல்லவள் இந்த பத்மாவதி தாயார் . குடும்பத்திற்குள் சொத்து பிரிப்பதில் தகராறு. சொத்தினால் வரும் மன அமைதியின்மை. அன்னியருடன் வாய்க்கா, வரப்பு தகராறு, குடியிருக்கும் இடத்தில் ஒற்றுமையின்மை போன்ற பிரச்சனைகள் இவளை வணங்குவதால் தீரும்.
பத்மாவதி தாயார் ஸ்லோகம்…
ஓம் நமோ பத்மாவதி
பத்ம நேத்ர வஜ்ர வஜ்
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’.
மேற்கானும் மந்திரத்தை வளர்பிறை திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை இரவு 9 மணிக்குமேல் பத்மாவதி தாயாரின் திருவுருவப் படத்தின் முன்பு நெய் தீபமேற்றி 108 முறை சொல்லி தாயாரை வணங்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு இரவில் இம்மந்திரத்தை சொல்லி தாயாரை வணங்க மேற்சொன்னபடி பணம் சொத்து சம்மந்தமாக குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதி நிலவும். பத்மாவதி தாயாருக்கு பூஜை செய்யும் இந்த 48 நாட்களில் அசைவ உணவு உண்ணக்கூடாது. அதேப்போல் காலையில் குளித்து இருந்தாலும், மீண்டும் மாலையில் பூஜைக்குமுன் குளிக்கவேண்டும்…
நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!