பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசம். முருகப் பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் முருகன் கோவிலுக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்வர். அதிலும் பழனி, திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் ஒரு மாதகாலமாகவே பாதயாத்திரையைத் தொடங்கி விட்டார்கள். தைப்பூசத்து அன்று விரதம் இருந்து வழிபடுவதால் என்ன பலன்? யார் யார் எல்லாம் எப்படி விரதம் இருக்க வேண்டும்? மதியம் படையல் வைப்பது எப்படி? என்று பார்க்கலாமா…
குழந்தை வரம் வேணும்னு இருப்பவர்கள், கடும் நோய்த் தாக்கியவர்கள் தைப்பூசம் அன்று விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும்.
குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பவர்கள் கூட இந்த பூச விரதத்தையும் சேர்ந்தே இருக்கலாம். ரொம்ப ரொம்ப விசேஷமானது. அதனால இந்த தைப்பூசத்துக்கு காலையில் இருந்து மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். முடிஞ்சவங்க இந்த விரதம் இருக்கலாம். முடியாதவங்க பாலோ, பழமோ எடுத்துக்கலாம்.
நீராகரமாகவும் எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் எடுக்கணும்னு அவசியம் இருப்பவர்கள் அவரவர் உடல் நலனைக் கருத்தில் கொண்டு எடுத்துக்கலாம். நாங்க மாத்திரை போட்டுக்குறோம் என்பவர்கள் அவர்களுக்கு ஏற்ப உணவு எடுத்துக் கொள்ளலாம். அவரவர் உடல் நிலைக்கேற்ப விரதம் இருந்தால் போதுமானது. மற்றவர்கள் சும்மாவே வழிபாடு செய்யலாம்.
முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்;கல், பாயசம் வைக்கலாம். அதிலும் பருப்பு பாயசம் ரொம்ப விசேஷம். மதியம் இலை போட்டு படையல் வைப்பவர்கள் படைக்கலாம். அன்றைய தினம் வள்ளலாரையும் வழிபட வேண்டிய ஒரு அற்புதமான நாள். வடலூரில் எழுந்தருளி அருள்புரியக்கூடிய ஜோதி சொரூபமாக நம் எல்லோருக்கும் ஞானத்தை வாரி வாரி வழங்கிய ஒரு வள்ளலாக விளங்கக்கூடியவர் ராமலிங்க அடிகளார். வடலூர் வள்ளல் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் ஞானவடிவமாக விளங்கக்கூடிய வள்ளல். ஜோதியிலே இவர் கலந்த தினமும் இந்த தைப்பூசம் தான். அதனால் மதியம் சில பேருக்கு படையல் போடும் வழக்கம் உண்டு. அவர்கள் வள்ளலாருக்குப் பிரியமான தயிர் சாதமும், அப்பமும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
முருகனுக்கு சிலர் கிருத்திகைக்குப் படையல் போடுற மாதிரியே பூசத்துக்கும் படையல் போடுவாங்க. சாதம், சாம்பார், அப்பளம், வடை, பாயசம் என எல்லாம் வைப்பார்கள். அவர்கள் மதியம் வழிபடலாம். முழு உபவாசம் இருப்பவர்கள் காலை முதல் மாலை வரை இருக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



