”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேனே” என்று கருணை உள்ளத்துடன் பாடியவர் வள்ளலார். அவரது கருணை சாதாரணமானது அல்ல. தனிப்பெரும் கருணை. அதனால் தான் அவர் இறைவனுடன் ஜோதி சொரூபமாக ஐக்கியமானார். அந்த நன்னாள் தான் இந்த தைப்பூசம் என்னும் பொன்னாள். இந்த நாளில் அவரைப் பற்றிய நினைவு கூர்வது நம் கடமை அல்லவா. வாங்க பார்க்கலாம்.
தைப்பூசத்து அன்று (1.2.2026) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விரதம் இருக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் விரதத்தைப் பூர்த்தி செய்து விளக்கேற்றி வழிபடலாம். அப்போது விரதம் இருந்தாலும் சரி. இல்லன்னாலும் சரி. இதை மறந்துடாதீங்க.
அன்று மாலை 6 மணிக்குத் தீபம் ஏற்றும்போது வள்ளல் பெருமானை மனதில் நினைத்து அவரது தாரக மந்திரமாகிய ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணை, அருட்பெருஞ்ஜோதி’ என்ற தாரக மந்திரத்தைச் சொல்லுங்க. வள்ளல் பெருமானாரை வழிபாடு செய்யக்கூடியவர்களுக்கு உடல் நோய், மன நோய் எல்லாம் நீங்கும்.
அந்த வீட்டுல அன்னக்குறை என்பதே இருக்காது. இத்தனை நலன்களையும் வள்ளல் பெருமானார் நமக்குத் தருவார். அதனால் அவரையும் இந்த நாளில் நினைவு கூர்வோம். முருக வழிபாடு செய்பவர்கள் திருப்புகழ் பாராயணம் செய்யலாம்.
அலங்காரம் அனுபூதி, வேல் மாறல், வேல் வகுப்பு எல்லாமே பாராயணம் பண்ணலாம். ஒரு நல்ல நாள் விரதம் இருக்குறீங்கன்னா ஒரு உயிருக்காவது அன்னதானம் செய்யுங்கள். இது வள்ளலாரையும் வழிபடக்கூடிய பூச நாள் என்பதால் அன்னதானம் செய்வதை மறந்துடாதீங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



