தைப்பூசம் பழனிக்கு அப்படி ஒரு சிறப்பா? பாம்பன் சுவாமிக்கு முருகப்பெருமான் வைத்த செக்!

தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி வருகிறது. தைப்பூசம்னாலே பழனி தான். இந்த தலத்தின் சிறப்பு குறித்து பார்க்கலாமா… பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானுடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். கிருபானந்த வாரியார் அவரை 2வது அருணகிரிநாதர்…

தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி வருகிறது. தைப்பூசம்னாலே பழனி தான். இந்த தலத்தின் சிறப்பு குறித்து பார்க்கலாமா…

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானுடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். கிருபானந்த வாரியார் அவரை 2வது அருணகிரிநாதர் என்றே அழைத்துள்ளார். பாம்பன் என்ற ஊரில் அவதாரம் செய்தார். முருகப்பெருமானை நேருக்கு நேராக தரிசனம் செய்தே ஆகணும் அப்படின்னு விடாப்பிடியான உறுதியான பக்தியோடு மயானத்தில் போய் குழி தோண்டு உட்கார்ந்து பிறப்பன்வலசை என்ற ஊரில் முருகப்பெருமானை நேருக்கு நேராகவே தரிசனம் செய்தவர் பாம்பன் சுவாமிகள்.

இதுல இருந்தே முருகப்பெருமான் மேல் பாம்பன் சுவாமிக்கு எவ்வளவு வைராக்கியமான பக்தி என்பது நமக்குத் தெரியும். பாம்பன் சுவாமிகள் முருகனைப் போற்றி 6666 பாடல்கள் பாடியுள்ளார்.

திண்டுக்கல்ல பாம்பன்சுவாமிகள் தனது நண்பர் அங்கமுத்துப் பிள்ளையுடன் பேசிக் கொண்டுள்ளார். அப்போது நாளைக்குப் பழனி போறேன்னு சொல்றீங்களே, முருகன் உத்தரவான்னு கேட்கிறார். அதற்கு பாம்பன் சுவாமிகள் ஆமாம்னு சொல்லிவிட்டுப் போகிறார். முருகனைத் தியானம் செய்தபடி அறையில் தங்கி இருக்கிறார்.

அப்போது ஒரு கரிய நிற உருவம் ஆள்காட்டி விரலை அவரை நோக்கி நீட்டுகிறது. ஏ அப்பாவு என்று குரல் கேட்கிறது. பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அதுதான். ”ஏ அப்பாவு பழனிக்குப் போறேன்னு சொன்னது முருகனின் உத்தரவான்னு அங்கமுத்து கேட்டபோது ஆமாம்னு பொய் சொன்னியே. அப்படி சொல்லலாமா? அது பிழை அல்லவா.

முருகனை வழிபடும் நீ பொய் சொல்வது நியாயமா?” என கேட்டது. அவரால கண்ணைத் திறந்து பார்க்க முடியல. எல்லாம் நடுங்குது. அப்போது அவர் ”நான் பொன்னும், பொருளும் கருதி பொய் சொல்லலயே. ஆத்ம லாபம் கருதித்தானே சொன்னேன். அதை சமயம் அறிந்து கொடுக்க எனக்கு தெரியாதா? எப்ப என்ன கொடுக்கணும்னு உனக்கு கொடுக்குற நான் கொடுக்காமல் இருப்பேனா?” என்றார்.

”நீ பொய் சொன்னதால நான் பழனிக்கு வான்னு உத்தரவு தரும்வரை நீ பழனிக்கு வரக்கூடாது. சத்தியம் பண்ணு”ன்னு அந்த கரிய நிற உருவம் கேட்கிறது. அவர் கண்ணைத் திறக்கவே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர் வழிய சொல்கிறார். சுவாமி நான் தவறிழைத்துவிட்டேன். இனி உத்தரவு வரும் வரை நான் பழனிக்கு வருவதில்லை என சத்தியம் பண்ணிக் கொடுத்தார். கடைசி வரை முருகன்கிட்ட பழனிக்கு வர உத்தரவு கேட்டார். ஆனாலும் அது கிடைக்கல.

தன் வயோதிக காலத்தில் சென்னை தம்புசெட்டி தெருவில் குதிரை வண்டிக்காரர் இடிச்சு கால் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கி இருந்தாலும் கூட முருகப்பெருமான் அவர் பக்கத்தில் இருந்து உடைந்த எலும்பை சரி செய்தார். ஆனால் கடைசி வரை அவரை அழைக்கவே இல்லை. ஏன்னா சத்தியத்தை சொல்ல வேண்டியவன் அதைத் தவறிவிட்டான். இந்த தலம் எப்பேர்பட்டதுன்னு எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் அவருடைய வாழ்க்கையில முருகன் நமக்குத் தந்த குறிப்பு தான் இந்த வரலாறு. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.