தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!

தை மாசத்துல நிறைய பண்டிகைகள் வரும். இதுல ரொம்ப விசேஷம் அமாவாசை. இது முன்னோர்களின் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நாள். எந்த ஒரு நல்ல காரியமானாலும் முன்னோர் வழிபாடு மிக முக்கியம். நாம் இன்று…

தை மாசத்துல நிறைய பண்டிகைகள் வரும். இதுல ரொம்ப விசேஷம் அமாவாசை. இது முன்னோர்களின் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நாள். எந்த ஒரு நல்ல காரியமானாலும் முன்னோர் வழிபாடு மிக முக்கியம். நாம் இன்று இப்படி இயங்க காரணம் நம் முன்னோர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது நமது கடமை.

தை மாசம் தான் விடியற்காலை நேரம். மார்கழி மாசம் பிரம்ம முகூர்த்த காலம். தை மாசம் தான் தட்சணாயணம் முடிந்து உத்தராயணம் தொடங்குகிறது. அதாவது இரவுப்பொழுது முடிந்து வி டியற்கலை வருகிறது. அதனால் தான் தை மாசம் மகர சங்கராந்தி என்ற தைப்பொங்கல் வருகிறது.

அதனால் சூரிய வழிபாடு என்பது விடியற்காலையில் செய்ய வேண்டியது. ஆதித்யன் உதயமான பிறகுதான் நாம் முன்னோர் வழிபாட்டை செய்ய வேண்டும். அதாவது தர்ப்பணம் செய்யலாம். இது தேவர்கள் வழிபடக்கூடிய காலம். அதனால் தான் மற்ற அமாவாசையை விட இது சிறப்புக்குரியது.

முன்னோர்களுக்கு நாம் சின்ன பரிசு கொடுத்தாலும் மகிழ்ந்து அதைப் பெரிசாகப் பேசுவாங்க. அந்த வகையில் நாம் எள்ளும், தண்ணீரும் இறைத்து மதியம் படையல் போட்டு வழிபாடு செய்கிறோம். இது அவர்களுக்குப் பேரானந்தத்தை நிச்சயம் தரும். நமக்கும் செய்தோம் என்ற மனநிறைவு உண்டாகிறது.

இந்த நம்பிக்கையே நமக்கு பல நல்லதைக் கொண்டு வந்து சேர்க்கும். முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நாம் முன்னோர்களை வணங்கினால்தான் தெய்வத்தை வணங்கத் தகுதியானவர்களாக இருப்போம். இதுதான் தெய்வ வழிபாட்டுக்கு முந்தைய வழிபாடு. இதைச் சரியாகச் செய்தால் தெய்வத்தின் அனுகூலம் சரியாகக் கிடைக்கும்.

18.1.2026 அதிகாலை 1.20 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.31 மணி வரை அமாவாசை உள்ளது. தர்ப்பணம் செய்ய காலை 6 மணிக்குப் பிறகு மதியம் 12மணிக்குள் செய்து விட வேண்டும். இலை போட்டு படையல் வைத்து வழிபட நேரம் காலை 11 மணி முதல் 11.45மணி வரை. மதியம் 1.35 மணி முதல் 2 மணிக்குள். தீபம் ஏற்றி வழிபடும் நேரம் மாலை 6 மணிக்கு மேல். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.