தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?

இன்று 14.4.2025 (திங்கள்கிழமை) விசுவாவசு ஆண்டாக தமிழ்ப்புத்தாண்டு மலர்கிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு 9.10மணி முதல் 10.20 மணி…

இன்று 14.4.2025 (திங்கள்கிழமை) விசுவாவசு ஆண்டாக தமிழ்ப்புத்தாண்டு மலர்கிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு 9.10மணி முதல் 10.20 மணி வரை வழிபடலாம். மதியம் இலை போட்டு வழிபட 12.30 மணி முதல் 1.30 மணி வரை வழிபாடு செய்து கொள்ளலாம்.

இந்த இது மட்டுமல்லாமல் கோவில் போய் வழிபட நேரமிருந்தால் வழிபடலாம். இந்த ஆண்டு விசுவாவசு வருடம் பிறந்துள்ளது. சூரியனின் ஆதிக்கம் இருக்குற காரணத்தால் இந்த ஆண்டு முழுவதுமே ஆதித்தனுடைய வழிபாடு மிகச்சிறப்பு.

அதனால் இன்று காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்க. நமது முன்னோர்கள் அனுதினமும் செய்து வந்ததுதான் சூரிய வழிபாடு. அன்றாடம் இப்படி வழிபட்டால் நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் உண்டாகும். தமிழ் வருடத்துக்கு உரிய கடவுள் சூரியபகவான். அவருக்கு அதிபதியாக விளங்குபவர் சிவபெருமான். அதனால் சிவனின் வழிபாடு சிறந்த வழிபாடாக அமையும்.

சிவபெருமானை வழிபட வழிபட இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமையும். பெருமாளை வணங்குபவர்கள் சூரிய நாராயண பெருமாளாகவே காட்சித் தருகிறார். அதனால் பெருமாளை வணங்கலாம். நரசிம்ம மூர்த்தியையும் வழிபடலாம். இந்த வழிபாடுகள் எல்லாம் இந்த ஆண்டு நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். அனைவரும் வழிபாடு செய்து நமக்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையணும்னு வேண்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்வோம். வழக்கம்போல இன்றும் அன்னதானம் செய்வது சிறப்பு.

ஆண்டின் முதல் நாளான இன்று கோவிலுக்குச் சென்று வழிபட்டதும் நமது வேலையைச் செய்ய ஆரம்பிப்பது நல்லது. முதல் நாளே லீவு போட்டு வீட்டில் இருந்து பொழுதைக் கழிக்காமல் வருடத்தின் முதல் நாளே லீவு போடாமல் வேலையைச் செய்து வந்தால் அந்த ஆண்டு முழுவதும் லாபகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அரசு வேலை செய்வோருக்கு இது விதிவிலக்கு. அவர்களும்கூட தங்களுக்குரிய வேலை சம்பந்தமான சில வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

               அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.