தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?

இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ்ப்புத்தாண்டு. விசுவாவசு வருடம். தமிழ்ப்புத்தாண்டுக்கு அறுசுவையையும் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்று வழக்கம் உள்ளது. இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் பிறக்கும் புத்தாண்டிலும் அறுசுவை…

இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ்ப்புத்தாண்டு. விசுவாவசு வருடம். தமிழ்ப்புத்தாண்டுக்கு அறுசுவையையும் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்று வழக்கம் உள்ளது. இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் பிறக்கும் புத்தாண்டிலும் அறுசுவை உணவையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய வழக்கம் உள்ளது. ஒரு வருடத்தில் எல்லா வகையான விஷயங்களும் வாழ்க்கையில் நடக்கும். இதை யாராலும் மாற்ற முடியாது.

அதனால அந்த இயற்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதமாக இறைவன் நமக்கு நன்மையே தர வேண்டும் என்று பிரார்த்திக்கும் விதமாகவும் நமக்கு இந்த முறையைப் பெரியவங்க வச்சாங்க. அதனால் நம் முன்னோர்கள் சாதம் வைக்கும்போது சாம்பார், புளிக்கொழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம் என வைப்பார்கள். ரசம் வைக்கும்போது அன்று மட்டும் வேப்பம்பூ ரசம் வைக்கணும்னு சொல்லிருக்காங்க.

மாங்காய் பச்சடி வைக்கணும். இவை ரொம்ப முக்கியமானது. இனிப்பு இதோடு சேர்ந்துடும். துவர்ப்பும் வச்சிருக்கோம். அதுமட்டும் அல்ல. காரம் எல்லாவற்றிலும் சேர்ந்துடும். இதெல்லாம் அவங்க அவங்களுக்கு என்ன முடியுதோ அதை வச்சி இலை போட்டு நமது குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்கி வழிபட வேண்டும்.

இந்த இனிய நாளில் புதுமணத் தம்பதிகள் தங்களுடைய ஊரில் உள்ளவர்களுக்கு வீடுதோறும் அவல், அச்சுவெல்லம், தேங்காய் ஆகியவற்றை வழங்குவார்கள். இது ஒரு சில ஊர்களில் அவ்வூர் முறைப்படி அமைந்து இருக்கும். தங்களுக்கு திருமணம் ஆகி விட்டதால் அந்த சந்தோஷமான தருணத்தை அனைவருடனும் கொண்டாடி மகிழும் விதமாக இப்படிக் கொடுப்பார்கள்.

தென்தமிழகத்தில் ஒருசில ஊர்களில் இந்தப் பழக்கம் இன்று வழக்கத்தில் உள்ளது. அதே போல இன்று ஊரில் அருகில் உள்ள கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக புத்தாடை உடுத்திக் கொண்டு சாமி கும்பிடச் செல்வார்கள்.