தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ ரசம் வைப்பது ஏன்னு தெரியுமா?

வரும் 14.4.2026 அன்று ‘பராபவ’ என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நன்னாளில் இறைவனிடம் நாம் இந்த ஆண்டையும் நல்லா சிறப்பா வைக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே வீட்டை…

வரும் 14.4.2026 அன்று ‘பராபவ’ என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நன்னாளில் இறைவனிடம் நாம் இந்த ஆண்டையும் நல்லா சிறப்பா வைக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே வீட்டை சுத்தம் செய்து நாம் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு தாம்பாளத்தில் மா, பலா, வாழை, வெத்தலைப்பாக்கு, நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி நகைகளை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கி விட வேண்டும்.

அத்துடன் மறக்காமல் கண்ணாடியையும் வைத்து விட வேண்டும். விடியற்காலை எழுந்ததும் அந்த தாம்பாளத்தைப் பார்த்து கண்ணாடியில் முகம் பார்த்து இறைவனிடம் இந்த ஆண்டும் நல்லபடியாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதுதான் கனி காணுதல். அதன் பிறகு வழக்கம்போல குளித்து முடித்து நைவேத்தியம் தயார் செய்து பூஜை செய்து வழிபடலாம். இந்த நாளில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபடலாம். தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானை வழிபடலாம். இதையொட்டி திருச்செந்தூருக்குக் கூட்டம் அலைமோதும். இந்த நன்னாளில் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்க வேண்டும்.

அவர்கள் நமக்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கி சிறப்பாக இருக்கும்படி ஆசிர்வதிப்பர். இந்த நாளில் புதிதாக வேலைக்குப் போவது, வியாபாரம் துவங்க உகந்த நாள். இந்த நல்ல நாளில் வழக்கம்போல மறக்காம ஒரு ரெண்டு பேருக்காவது அன்னதானம் செய்தால் நமக்கு மிகவும் புண்ணியமாக இருக்கும்.

நாம சமைக்கிற உணவில் இனிப்பு, புளிப்பு, காரம் இருக்கு. ஆனா துவர்ப்பு, கசப்பு சேர்ப்பதில்லை. அதனால இன்னைக்கு நாம சமைக்கிற உணவில் கசப்புக்காக வேப்பம்பூ ரசம் வைக்கலாம். இந்த சீசனில் தான் வேப்பம்பூ எல்லா இடங்களிலும் பூத்துக் குலுங்கும். அதனால் தான் அன்றைய நாளில் வேப்பம்பூ ரசம் வைக்கிறாங்க என்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி.