வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!

By Sankar Velu

Published:

நமக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துத் தரக்கூடியது மகா மிருத்யுஞ்ச மந்திரம். இதை அடிக்கடி வீட்டில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஒரு வீட்டிற்குள் நுழைந்த உடனே நம் கண்ணில் ஏற்படக்கூடிய காட்சிகளை விட நமது மூக்கில் தெரியக்கூடிய வாசனை தான் முதலில் வரும்.

அதனால் நறுமணம் மிக மிக முக்கியமானது. தெய்வீகத்தன்மை இருக்க வேண்டும் என்றால் நல்ல வாசனை தரும் சாம்பிராணியை தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் போட வேண்டும்.

Sampirani
Sampirani

நம்மிடம் சண்டை போடணும்னு வர்றவங்களைக் கூட அமைதியாக்கும் இந்த சாம்பிராணி வாசனை. அதே போல குங்கிலியமும் போடலாம். இது தீய சக்திகளை, எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும். நல்ல ஆற்றல்களை உள் இழுக்கும். மங்கல விளக்கை தினமும் ஏற்ற வேண்டும். வெள்ளி, செவ்வாய் மட்டும் சிலர் விளக்கேற்றுவர். ஆனால் இப்படி செய்யக்கூடாது.

தினமும் நாம் விளக்கேற்ற வேண்டும். மங்கல ஒளி எங்கு அன்றாடம் ஏற்றப்படுகிறதோ அங்கே மகாலெட்சுமி வாசம் செய்வாள். மணி அடித்துப் பூஜை செய்வதைத் தினமும் செய்ய வேண்டும். அதே போல ஏதோ ஒரு நைவேத்தியம் வைக்க வேண்டும். வாழைப்பழம், சர்க்கரைப்பொங்கல், கற்கண்டு என ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

மணி ஓசை தினமும் ஒலித்தால் அங்கு துர்தேவதைகளின் வாசம் அண்டாது. இப்படி தினமும் 2 வேளை பூஜை செய்வது நல்லது. அல்லது ஒருவேளையாவது இப்படி பூஜை செய்ய வேண்டும். ஆண்கள் மட்டும் இருந்தாலும் சரி. விளக்கேற்ற வேண்டும். பெண் குழந்தைகள் இருந்தால் அதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

Koil mani osai
Koil mani osai

இந்த மாதிரி வழிபாட்டு விஷயங்களை நீங்க முதலில் சொல்லிக் கொடுத்து வந்தால் அதற்குப் பிறகு அவர்கள் ஆர்வமாக விளக்கேற்ற ஆரம்பித்து விடுவார்கள். அந்த ஒழுக்கமே அவர்களுக்கு வாழ்வில் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். இந்த நாலு விஷயங்களையும் நாம் செய்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.

இவ்வளவு விஷயங்கள் செய்தும் வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க வில்லை என்றால் அதற்கும் ஒரு வழி உண்டு. வீட்டில் அமங்கலமான வார்த்தைகள் அதாவது கெட்ட வார்த்தைகளாகப் பேசி திட்டக்கூடாது. உதாரணத்திற்கு சனியனே என்று கூட திட்டக்கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

drinking water
drinking water

கோபம் அதிகமாக வந்தால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்பவர்கள் ஒரு டம்ப்ளர் தண்ணீர் குடிங்க. நாம் பேசும் வார்த்தைகளைத் தான் குழந்தைகள் காது கொடுத்துக் கேட்டுக் கற்றுக்கொள்ளும். அதனால் இப்படிப் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.