குழந்தை வரம் வேண்டுமா?  கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!

சஷ்டி விரதம் எந்த அளவுக்கு பவர்புல்லானதோ அதே அளவு பலன் தரக்கூடியது கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் பிறந்த திதியை ஒட்டி வருவது தான் கோகுலாஷ்டமி. அன்னைக்கு நாம விரதம் இருந்து வழிபட்டால் நாம நினைச்சது…

சஷ்டி விரதம் எந்த அளவுக்கு பவர்புல்லானதோ அதே அளவு பலன் தரக்கூடியது கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் பிறந்த திதியை ஒட்டி வருவது தான் கோகுலாஷ்டமி. அன்னைக்கு நாம விரதம் இருந்து வழிபட்டால் நாம நினைச்சது நடக்கும். குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு நிச்சயம் இது பலன் கொடுக்கும். அதனால நம்பிக்கையோடு முழுமனசாக விரதம் இருந்து வழிபடலாம்.

ஆகஸ்டு 26ம் தேதி கோகுலாஷ்டமி வருகிறது. இது அன்று அதிகாலை ஆரம்பித்து மறுநாள் அதிகாலை வரை தொடருது. அதனால ஆகஸ்டு 26ம் தேதி விரதம் இருந்தாலே போதும். அன்று திங்கள்கிழமை வருகிறது. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணஜெயந்தி அன்று நல்ல நேரத்தில் கிருஷ்ணரை நினைத்து சாமி கும்பிடணும். அவருக்குப் பிடித்த உணவைத் தயாரித்து வழிபடணும். அன்று சுவாமி படத்தை சுத்தம் செய்து சந்தன, குங்குமம் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். பூ வைத்து அலங்கரித்து நெய் தீபம் ஏற்றலாம். தயிர், பால், வெண்ணை, நெய் என பால் சார்ந்த உணவை நைவேத்தியமாக வைக்கலாம்.

லட்டு, அவல், சீடை, தட்டை என எல்லாவற்றையும் கண்டிப்பாக வைங்க. இவை கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுகள். பாதம் கண்டிப்பாக வைங்க. வீட்டு வாசல்படியில் இருந்து பூஜை அறைக்கு வருவது போல பாதம் வைங்க. அது எப்படின்னா அரிசி மாவைத் தண்ணீரில கெட்டியா கரைச்சிட்டு அதைத் தொட்டுப் பிழிஞ்சி துணியால வைக்கலாம். வரையத் தெரியலன்னாலும் முயற்சி பண்ணுங்க.

சாமி கும்பிட்டதும் அந்த பலகாரங்களை அருகில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கணவன், மனைவியும் சாப்பிடலாம். விரதம் இருப்பவர்கள் கோகுலாஷ்டமி அன்று காலை முதல் மாலை வரை விரதம் இருந்து மனப்பூர்வமாக கிருஷ்ணரை வேண்டி வழிபடலாம்.

srikrishna
srikrishna

அன்று விரத நேரத்தில் தண்ணீர் மட்டும் குடிக்கலாம். காலையில் சாமிக்கு பூ வைத்து ஏதோ ஒரு நைவேத்தியம் வைத்து சாமியைக் கும்பிட்டு விட்டு விரதத்தைத் தொடங்கலாம். அப்போது மனமுருகி சாமிக்கிட்ட உங்களோட வேண்டுதலை வைங்க.

அந்த நாள் முழுவதும் பாசிடிவ்வான எண்ணங்களோடு இருங்க. மகிழ்ச்சியாக சாமி கும்பிடுங்க. கொண்டாடுங்க. விரதம் இருக்க முடியலைன்னாலும் பிரச்சனை கிடையாது. அன்று மனப்பூர்வமாக சாமி கும்பிட்டால் போதும். மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் எடுத்துக்கலாம்.

அல்லது ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்கலாம். சாமி கும்பிட ஏற்ற நேரம் காலை 7.01ல் இருந்து 7.33 மணி வரையும், காலை 9.38 மணி முதல் 10 மணி வரையும் வழிபடலாம். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் எப்போ வேண்டுமானாலும் சாமி கும்பிடலாம். குறிப்பாக மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை வழிபட விசேஷம்.