கந்த சஷ்டி விரதத்தின் 2வது நாள் புதுசா மலர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். என்ன பூ கிடைக்கிறதோ அதை வைத்து பூஜை பண்ணலாம். 2ம் நாள் 2 தீபம் ஏற்றணும். சரவணபவ என்ற நாமத்தில் 2வதாக வரும் ர என்ற எழுத்தில் தீபம் வைக்கணும்.
சற்கோண தீபத்துக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது. ‘சரவண’ என்ற நாமம் உன்னதமானது. ‘சர’ என்றால் தர்ப்பை. ‘வனம்’ என்றால் காடு. சரவணம் என்றால் தர்ப்பை காடு. இயற்கையாக உள்ள நீர்நிலை சரவண பொய்கை.
அந்த இயற்கையான பொய்கையில் அவதரித்த முருகப்பெருமானுக்கு ‘சரவணன்’ என்று பெயர். அவருக்கு உரிய தாரக மந்திரம் சரவணபவ. ‘ஓம் சரவணபவ’ என்பதை சற்கோணமாக எழுதிக் கொண்டால் 6 முக்கோணங்கள் வரும்.
இந்த தீபத்திற்குள் முருகப்பெருமானைப் பிரார்த்தனை பண்ணி வழிபட்டால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். அதனால தான் இந்தத் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடும்போது முழுமையாக நமது வழிபாடு பூர்த்தி அடைகிறது.
சஷ்டி காலத்தில் இப்படி தீபம் ஏற்றி வழிபடும்போது நல்ல பலன்கள் கிடைக்கிறது. காலை, மாலை என இருமுறை தீபத்தை ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பருப்புப் பாயாசத்தை நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம்.
நைவேத்தியத்தை குறைவாக எடுத்துக் கொண்டால் தவறு இல்லை. அதே போல தினமும் தானம் செய்ய வேண்டும். இந்த 2வது நாளில் 2 சுமங்கலிகளுக்கு மங்கலப்பொருட்களைத் தானம் பண்ண வேண்டும். இப்படி செய்யும்போது சீக்கிரம் கல்யாணம் ஆகும், கணவன், மனைவி உறவு பலப்படும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும், வாழ்க்கையில் வெறுப்புகள் நீங்கும். இல்லறம் மகிழ்ச்சியாகும்.
கல்யாணம் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் அவரவர் கையாலேயே இப்படி தானம் பண்ணுவது மிகவும் நல்லது. திருச்செந்தூர் திருப்புகழை இந்த 2வது நாளில் படித்து பூஜை செய்யலாம். இது கல்யாணம் கைகூட வேண்டிப் பாராயணம் செய்வது. நம்பிக்கையைத் தளர விடாமல் முருகப்பெருமானை மனமுருக வேண்டிப் பாடுவது நல்ல பலனைத் தரும்.
3.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் பூஜை செய்து நைவேத்தியம் பண்ணலாம். தானம் செய்ய மதியம் 12 மணி முதல் 1 மணி வரை. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.