சிவன் கோவில்களில் பிரதோஷ காலங்களிலும் சரி. மற்ற முக்கிய பூஜைகளின் போதும் சரி. பலவிதமான பொருள்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்வதுண்டு. அப்படி என்னென்ன பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்வார்கள்? அதற்கு என்னென்ன பலன்கள் உண்டு என்பதைப் பார்க்கலாமா…
சுகந்த தைலம் அல்லது எண்ணை கொண்டு அபிஷேகம் செய்தால் சுகம் கிடைக்கும். அரிசி பொடி கொண்டு அபிஷேகம் செய்தால் கடன் நிவாரணம் பெறலாம். நெல்லிக்காய் பொடி கொண்டு அபிஷேகம் செய்தால் வியாதி நீங்கும். மஞ்சள் பொடிக்கு வசீகரமும், பஞ்சகவ்யத்துக்கு மங்களமும், திருமஞ்சள் திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் செய்தால் பாவங்களில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.
பஞ்சாமிர்தத்துக்கு பக்தி, சம்பத்தும், வாழைப்பழத்துக்கு விவசாயம் பெருகுவதும், மாம்பழத்துக்கு மக்கள் விருத்தியும் கிடைக்கும்.
பலாப்பழத்துக்கு லோகவசியமும், மாதுளம்பழத்துக்கு சோப நீக்கமும், நார்த்தம்பழத்துக்கு ஒழுங்கான வாழ்வும், எலுமிச்சம்பழத்துக்கு எமபயமும் நீங்கும். பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தியும், பசுந்தயிர் என்றால் குரல் வளமும், தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் குரல் வளமும் கிடைக்கும்.
கரும்புச்சாறுக்கு தேக ஆரோக்கியமும், இளநீருக்கு ராஜயோகமும், சுத்த அன்னத்துக்கு லோகஷேமமும், ஸ்கஸ்ர தாராபிஷேகத்துக்கு ஞானமும் கிடைக்கும். விபூதிக்கு சிவன் அருட்செல்வமும், சந்தனத்துக்கு லட்சுமி கடாஷமும், கும்ப ஜலத்துக்கு ஜென்ம சாபல்யமும், பன்னீருக்கு சர்வலோக பத ப்ராப்தியும் கிடைக்கும்.
அதனால் பக்தர்கள் மேற்கண்ட அபிஷேகப் பொருள்களில் உங்களுக்கு என்ன பலன் வேண்டுமோ அதற்குரிய அபிஷேகப் பொருளை சிவாலயத்துக்கு வாங்கிக் கொடுத்து பலன் பெறுங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



