வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!

By Sankar Velu

Published:

இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை… சிறப்பாக வழிபட முதல்ல எல்லாரும் பார்ப்பது நல்ல நேரம் தான். அதிலும் பூஜை செய்ய உகந்த நேரம் பார்க் வேண்டும். இன்று நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்னு சொல்லிக் கொடுப்பது தான். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

vidyarambam
vidyarambam

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் கொண்டு பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மகாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு வருகிறோம். அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகியவற்றைப் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி.

முதல் மூன்று நாள்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையைப் பொதுமக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்து இல்லங்களிலும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பூச்சந்தைகளிலும் மக்கள் கூட்டம்கூட ஆரம்பித்துவிட்டனர். மளிகைக்கடை, காய்கறிக்கடை, மங்கலப்பொருள்கள் கடை என இந்த பூஜையைச் சார்ந்து எல்லா கடைகளிலும் வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது.

அந்த வகையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வழிபட உகந்த நேரத்தைப் பார்ப்போம். புரட்டாசி 25 ம் நாளான இன்று (11.10.2024 – வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7.30 மணி வரையும், காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் வழிபட ஏற்ற நேரம்.

அதன்பிறகு மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் வழிபடலாம். அதன்பிறகு தான் எங்களுக்கு வசதி உள்ளது என்பவர்களுக்கு மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை பூஜை செய்து வழிபடலாம்.

குழந்தைகளுக்கு எழுத்து அறிவிப்பது அதாவது இதை வித்யாரம்பம்னு சொல்வாங்க. குழந்தை பிறந்து 2 வயதிற்கும் மேலானதும் முறையான பள்ளிக் கல்வியைக் கற்பதற்கு முன்பு செய்யப்படும் ஒருவித சடங்கு. அந்த வகையில் இதற்கு உகந்த நேரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய பூஜை செய்ய உகந்த நேரம் இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், காலை 10.30 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் சொல்லிக் கொடுத்து பூஜை செய்யலாம்.

அதன்பிறகு தான் வசதி என்பவர்கள் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்தப் பூஜையை வெகுசிறப்பாகச் செய்யலாம். எல்லாத்துக்கும் நேரம் தானே நல்லாருக்கணும். அதை மறக்காம கடைபிடிச்சீங்கன்னா நீங்க தான் எப்பவும் கிங்.