சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம். நவராத்திரி கொலு வைத்தவர்கள் விஜயதசமியோடு எடுப்பார்கள். சிலர் அதன்பிறகு நாலு நாள்கள் வைத்து இருப்பார்கள். அது அவரவர் வசதியைப் பொருத்தது. அகண்ட…

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம்.

நவராத்திரி கொலு வைத்தவர்கள் விஜயதசமியோடு எடுப்பார்கள். சிலர் அதன்பிறகு நாலு நாள்கள் வைத்து இருப்பார்கள். அது அவரவர் வசதியைப் பொருத்தது. அகண்ட தீபம் ஏற்றியவர்கள் விஜயதசமி வழிபாடை நிறைவு பண்ணிட்டு ஒரு மலரால் அதை நிறைவு செய்யலாம். கலசத்தில் நீர் வைத்து வழிபட்டால் அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். அதில் உள்ள எலுமிச்சைப்பழத்தைப் பூஜை அறையின் குப்பைப் பொருளில் சேருங்கள். அரிசி இருந்தால் பொங்கல் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் வைத்து வழிபடலாம். இந்த நாலு வகை வழிபாடுகளை செய்பவர்கள் வியாழன் அன்று எடுத்து வைக்கலாம். அல்லது சனிக்கிழமை எடுக்கலாம்.

நவராத்திரியின் நிறைவு வழிபாடு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. அதுவரை வழிபடாதவர்கள் இன்று(1.10.2025) மட்டுமாவது 3 சக்திகளையும் சேர்த்து வழிபடலாம். இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வழிபடலாம். 10.40 மணி முதல் 11.50 மணி வரை வழிபடலாம். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை வழிபடலாம். மாலை 6 மணிக்கு மேல் எப்போ வேணாலும் வழிபடலாம். விஜயதசமி வித்யாரம்ப நேரம் 2.10.2025 அன்று காலை 7.45 மணி முதல் 8.50 மணி வரை வழிபடலாம்.

அதன்பிறகு 10.40 முதல் 12 மணி வரை வழிபடலாம். அன்று தசமி மதியம் 3.45 மணி வரை தான் இருக்கு. அதனால் காலையில் வழிபடுவது சிறப்பு. அல்லது வழி இல்லாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வழிபடலாம்.

படிப்பவர்கள் புத்தகத்தையும், வியாபாரம் பண்ணுபவர்கள் அவர்களுக்கான பொருளையும் வைத்து வழிபடலாம். இந்தப் பூஜையில் எல்லா விதமான வித்தைகளும், ஞானங்களும் கைகூடணும்னு வேண்டிக் கொள்ளுங்கள். அவல், பொரிகடலை, பழங்கள், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

விஜயதசமி அன்று (11.10.2025) அம்பாளுக்கு வெற்றித்திருநாள். அதனால் அம்பாள் சந்தோஷமாக இருக்கும் அந்த தினத்தில் எல்லா விதமான அருளையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபடலாம்.