முருகப்பெருமானுக்கு எத்தனை நாமங்கள்னு அருணகிரிநாதர்கிட்ட கேட்டா வெகுகோடி நாமங்கள் என்று சொல்வார். ரணபலிமுருகன்னும் ஒரு நாமம் உள்ளது. இப்படி ஒரு கோவில் உள்ளது. இது அதிசக்திவாய்ந்த கோவில். இங்குள்ள வேல் அற்புத பொக்கிஷமாக விளங்குகிறது.
முருக பக்தர்
ராமநாதபுர மன்னர் கிழவர் சேதுபதி. அவருக்கு சாத்தப்பன் என்ற வைரவன் சேர்வை என்ற தளபதி பெரிய தலைவலியாக இருந்தார். அவர் முருக பக்தர். திருச்செந்தூர் முருகன் மேல் அப்படி ஒரு காதல். அதிதீவிர பக்தராக இருந்தார். ஒருநாள் திருச்செந்தூருக்குப் போகமுடியாத நிலை வந்துவிட்டது.
சோதனை
தொடர்ந்து செய்யும் செயல் நடுவில் செய்ய முடியாமல் போனால் நாம் ரொம்ப புலம்பித் தவிப்போம். வைரவனுக்கும் அப்படி ஒரு சோதனை. ‘இறைவா எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை’ன்னு அழுது புலம்பிவிட்டார். அன்று அவரது கனவில் முருகன் தோன்றினார். ‘இனி என்னைத் தேடி நீ வர வேண்டாம். நான் உன்னைத் தேடி வருகிறேன்’ என்றார்.
கண்ணா உனை
‘தேவிப்பட்டினம் கடற்கரையில் ‘கண்ணா உனை’ என்ற பகுதியில் கடலுக்கு அடியில் வள்ளி, தேவசேனா சமேதராக அற்புத வேலோடு இருக்கேன்’ என்று சொல்கிறார். ‘கருடன் மேலே பறக்கும். எனக்கு அங்கு கோவில் கட்டி கும்பிடு’ன்னு சொல்றார். அவர் ஆவலோடு கோவில் கட்டணும்னு இருக்கிறார்.
இதே போல உத்தரகோசமங்கையில் ஆதிமங்களேஷ்வர் குருக்களுக்கும் கனவு வருகிறது. இருவரும் ஒரே இடத்திற்கு வந்து கடலில் முருகனைத் தேடுகிறார்கள். அங்கு தேடுபவர்களுக்கு அவரைக் கண்டுபிடிக்கவே முடியலை. உள்ளே போறவர்களுக்கு எல்லாம் ரத்தக்காயமாக வருகிறது.
நான் ஆள் அனுப்பினது தப்பு. நீ வந்து தானே எடுன்னாருன்னு வைரவரே கடலுக்குள் மூழ்கி வள்ளி, தேவசேனாவுடன் முருகரும், அதி அற்புத வேலும் வெளியே கொண்டு வருகிறார். அந்த வேலில் முருகப்பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுதான் சத்ருசம்ஹார வேல். மன்னனிடம் வந்து சொல்கிறார். அவரே கோவில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து விடுகிறார். முருகப்பெருமானைத் தேடி ரணகளமானதால் ரணபலிமுருகர் என்ற பெயரும் வந்தது.
பெருவயல் கோவில்
பெருவயல் என்ற கிராமத்தில் தான் இந்த அற்புதமான கோவில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 14 கிலோமீட்டர். தேவிப்பட்டினத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வழிபட்ட பலன்
இங்கு ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் எழுந்தருளியுள்ளனர். வைரவனுக்கு ராமநாதசுவாமி மேலும் அதீதபக்தி. இந்தக் கோவிலில் சென்று வழிபாடு பண்ணினால் ராமேஸ்வரத்துக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.
ரணபலி முருகர்
சஷ்டியும் சத்ருசம்ஹார வேலோடு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ரணபலி முருகர் என்ற பெயரைக் கேட்டாலே மனதுக்குள் நடுக்கமாக உள்ளது. நம் வாழ்க்கையில் வரும் கடனை அடைத்து அந்தப் பிரச்சனைகள், உடலில் வரும் நோய் ஆகியவற்றைக் காத்து அருள்புரிகிறார்.
அதே போல மனதில் ஏற்படும் ரணங்கள் போன்ற கவலைகளையும், துன்பங்களையும் போக்குபவராக உள்ளார். பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல் என அனைத்துத் தீமைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார். எதிரிகளிடம் இருந்து நம்மைக் காக்கக்கூடிய அதிசக்திவாய்ந்த வேல், முருகப்பெருமான் தான் இங்கு உள்ளது.
இங்கு போய் நம் வாழ்க்கையில் ரணங்கள் எல்லாம் நீங்கி சுகமான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நிச்சயமான உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.