வருகிறது புரட்டாசி… முதல் நாளிலேயே இத்தனை சிறப்புகளா? அந்த நாலு நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

By Sankar Velu

Published:

புரட்டாசி மாதம் இந்த ஆண்டு பௌர்ணமி நாளில் பிறக்கிறது. 17ம் தேதி காலை 11.22 மணிக்கு ஆரம்பிக்கும் பௌர்ணமி அன்று முழுவதும் உள்ளது. பெருமாளுக்கு உகந்த நாளாகிய சத்யநாராயண பூஜையை செய்வது வழக்கம்.

அதுவும் புரட்டாசி மாதம் வருவதால் இது மிகவும் விசேஷம். காலையில் எழுந்ததும் பெருமாளுடைய படம் இருந்தால் துளசி மாலையை சாற்றுங்க. துளசி தீர்த்தம் வைங்க. காலையில் பூஜை பண்ண முடிந்தால் பண்ணுங்க.

அன்று வேலை நாள் காலையில் சாமி கும்பிட நேரமில்லைன்னா மாலையில் நெய் தீபம் ஏற்றி மல்லிகை, முல்லை மலர்கள், துளசி மாலை போட்டு வழிபடலாம். துளசி தீர்த்தம், பானகம், கல்கண்டு நைவேத்தியம் வைக்கலாம். ஒரு டம்பளர் பால், பானகம், கல்கண்டு என ஏதாவது ஒன்றை வைத்து அதனுடன் துளசி தீர்த்தம் வைக்கலாம்.

‘ஓம் நமோ நாராயணாய நமக’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபமாக சொல்லலாம். இறைவனின் நாமத்தைச் சொல்ல சொல்ல அதன் சக்தி நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும்.

அருகில் உள்ள பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், சக்கரத்தாழ்வார் கோவிலுக்குச் சென்று வரலாம். இந்த ஆண்டு 4 சனிக்கிழமைகள் உள்ளது. அவற்றில் 2 அதிவிசேஷம். முதல் சனிக்கிழமை 21 வருது. அடுத்து வரும் 28 ஏகாதசி. அடுத்து அக்.5 வருது. அதன்பிறகு 4வது சனிக்கிழமை அக்.12ம் தேதி வருகிறது.

அதில் திருவோணம் நட்சத்திரம் வருகிறது. நாலு சனிக்கிழமையும் விசேஷம். புரட்டாசி மாதம் புதனின் ஆதிக்கம் எப்படி இருக்கிறதோ அதே போல சனிக்கிழமை வழிபாடும் விசேஷம்.

Purattasi 24
Purattasi 24

புதன் கிழமையும் வழிபாடைச் செய்வதால் சிறப்பான பலன் தரும். புதன் கல்விக்குரியவர். எந்த ஒரு செயலிலும் நேர்த்தியும், அழகும், கலைநுணுக்கமும் இருக்க வேண்டும். அதைத் தருபவர் புதன் தான்.

கல்வி, ஞானம் தேவை. அதை இந்த மாதத்தின் வழிபாடுகளில் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ள முடியும். குழந்தைகளின் கல்வி, செல்வம் கிடைக்கவும் இந்த வழிபாடு உதவும். புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் தளிகை இடலாம். முதல் வாரமே கோவிலுக்குச் செல்பவர்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து கோவிலுக்குப் போகும் பாக்கியம் கிடைக்கும்.

புரட்டாசி மாதம் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டால் ஜீரணத்திற்கு நல்லது. அந்த மாதத்தில் அதற்கான சக்தி குறைவாக இருக்கும். அதனால் தான் அசைவத்தைத் தவிர்த்து சைவமாக சாப்பிட்டு விரதம் இருக்கிறோம். இந்த மாதத்தில் நாம் அன்னதானம் செய்வது மேலும் பல நற்பலன்களைப் பெற்றுத் தரும்.