பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!

இன்று (15.1.2026) தை பொங்கல்.  வைக்கிறதுக்கான நேரம் என்ன தெரியுமா? சூரிய பொங்கல் என்றால் காலை 6 மணிக்கு முன்னாடியே வச்சிடணும். 5.45 மணிக்கெல்லாம் பொங்கல் வச்சி முடிச்சா 6 மணிக்கெல்லாம் நைவேத்தியம் பண்ணிடலாம்.…

இன்று (15.1.2026) தை பொங்கல்.  வைக்கிறதுக்கான நேரம் என்ன தெரியுமா? சூரிய பொங்கல் என்றால் காலை 6 மணிக்கு முன்னாடியே வச்சிடணும். 5.45 மணிக்கெல்லாம் பொங்கல் வச்சி முடிச்சா 6 மணிக்கெல்லாம் நைவேத்தியம் பண்ணிடலாம். ஆறு மணிக்குள்ள படையல் பண்ணிடணும்.

அதன்படி சூரிய பொங்கலை அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் வைத்து விட வேண்டும். இது ரொம்ப ரொம்ப விசேஷமானது. அப்படி முடியாதவர்கள் எந்தெந்த நேரத்தில் வைக்கலாம்னு பாருங்க. காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணி வரைக்கும் நல்ல நேரம் இருக்கு. அப்புறம் 10.35 மணியில் இருந்து 1 மணி வரைக்கும் நல்ல நேரம் இருக்கு.

இந்த நேரங்களைப் பயன்படுத்தி பொங்கல் வைக்கலாம். விறகு அடுப்பு வைக்க வசதி இல்லாதவர்கள் கேஸ் ஸ்டவ்வில் செய்து கொள்ளலாம். முடிஞ்ச வரை பழமையை இது மாதிரி விழாக்களில் கடைபிடிங்க. மண்பானையில் பொங்கல் வைக்கலாம். சூரிய பகவானுக்குப் படையல் பண்ணனும். இந்த உலகில் எல்லா உயிர்களும் வாழ்வது சூரியனின் கருணையால். ஆதித்யனோட கருணை இல்லன்னா உயிர்கள் எல்லாம் எப்படி இயங்கும்?

இன்னைக்கு நம்ம உடல்ல பல நோய்கள் வருது. பிளட் டெஸ்ட் எடுத்தா வைட்டமின் டி ரொம்ப குறைவா இருக்கு. அதனால வரும் நோய்கள் தான்னு தெரிய வருது. சூரிய ஒளியில் இருந்து நம்ம தோல் தயாரிப்பது தான் வைட்டமின் டி. யாரும் சூரிய வெயில்ல போய் நிக்கிறது கிடையாது. சூரிய நமஸ்காரமே இல்ல. அதெல்லாமே நமக்கு மறந்து போச்சு. அதனால அன்றாடம் போய் ஆதித்யனைப் பார்க்கணும். அந்த ஒளியை வாங்கிக்கணும்.

அதனால இந்த நாளில் நமக்கு ரொம்ப ரொம்ப விசேஷம். உலகில் உள்ள அத்தனை பேருக்கும் படியளக்கும் கடவுள். நாம் அவரைத் தேடிப் போக வேண்டியதில்லை. தினம் நம்மைத் தேடி அவர் வீட்டு வாசலுக்கே வர்றார். வந்து அருள்புரிகிறார். அதனால இந்த நாளில் அவருக்கு நன்றி சொல்லிட்டு உன்னுடைய கருணையால உலகம் எங்கும் செழித்து இருக்கணும். பஞ்சமின்றி இருக்கணும்.

முறையான மழை. நல்ல விவசாயம். எல்லாத்துக்கும் கிடைக்கணும்னு ஆதித்ய பகவானைப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நல்ல நாளில் மஞ்சள், இஞ்சி, கரும்பு, வாழை என நாம் விளைவித்த காய்கறிகள், பழங்கள் என எல்லாத்தையும் அவருக்கு நைவேத்தியம் பண்ணி நன்றி தெரிவிச்சிக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.