அதென்ன பஞ்சகவ்ய விளக்கு? இதை வீட்டில் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?

By Sankar Velu

Published:

காமாட்சி விளக்கு, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, தங்க விளக்கு இப்படி பல விளக்குகளை நாம் வைத்திருப்போம்.

சாணம், கோமியம், பால், தயிர், நெய் என்ற 5 பொருள்களைக் கொண்டு செய்யும் விளக்கு பஞ்சகவ்ய விளக்கு. இந்த விளக்கு இப்போது வந்ததல்ல. ஒரு காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய விளக்கு.

பஞ்சகவ்யம்

சாணம் என்றாலே அது மிகவும் சிறப்புக்குரியது. பச்சைப் புற்கள், வைக்கோல், பசுந்தழைகள், புண்ணாக்கு என மாடு சாப்பிடும்போது அது இடும் சாணம் ரொம்ப அருமையா இருக்கும்.

அந்த சாணம் என்பது திருநீறு தயாரிக்கக்கூடிய திவ்யமான பொருள். அதை வைத்துத் தான் திருநீறு தயாரிக்கிறோம். சாணம் கொண்டு தான் மொழுகிறோம். சாணத்தைக் கொண்டு தான் வரட்டி தயாரித்து வேள்விக்குப் பயன்படுத்துகிறோம்.

panja kavya vilakku
panja kavya vilakku

கோமியத்தைக் கொண்டு தான் வீட்டில் தெளித்து தீட்டைக் கழிக்கிறோம். கங்கை நீர் போல இதுவும் புனிதமானது. மகத்துவமானது. இன்றும் இந்த நடைமுறை வழக்கில் உள்ளது.

அதே போல பால், தயிர், நெய் எல்லாமே மகத்துவமானது. இவை எல்லாவற்றையும் தகுந்த விதத்தில் கலந்து அதை விளக்காக செய்கின்றனர். இதைப் பலரும் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.

எப்படி பயன்படுத்துவது?

Panjakavya vilakku2
Panjakavya vilakku2

இந்த விளக்கை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை ஏற்றுவது விசேஷமானது. இல்லாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மாலை ஏற்றலாம்.

இதை ஏற்றும் போது இதற்குக் கீழே ஒரு அகல்விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சாம்பிராணி கரண்டியையும் வைக்கலாம். இது ஒரு வேள்வி செய்வதற்கு சமம்.

ஒரு வேள்வி நாம் செய்தால் அதிலிருந்து வரும் புகை நமக்கு எப்படி நன்மை செய்யுமோ அது போல இது நம் சுவாசத்திற்கு நன்மை செய்யும். சிலருக்கு இந்தப் புகை அலர்ஜியாகக் கூட இருக்கலாம். அவர்கள் இதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நன்மைகள்

இந்தப்புகை உடலுக்கும் நுரையீரலுக்கும் நன்மை தரக்கூடியது தான். இந்த விளக்கில் ஊற்ற நெய் தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் விசேஷமானது. இதில் ஊற்றிய நெய், திரி எல்லாம் எரிந்து முடிந்ததும் விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும்.

panjakavya3
panjakavya3

அப்போது வரும் புகை வேள்வியின் போது வெளிவரும் புகைக்குச் சமமானதாக இருக்கும். அதாவது ஹோமம் பண்ணும்போது வெளிவரும் வாசனை இதிலிருந்து வரும். இது கெட்ட புகை அல்ல. நல்ல புகை தான். இதிலிருந்து கங்கு வந்ததும் சாம்பிராணி போட்டால் நல்ல கமகமகமன்னு வாசம் வரும்.

அற்புத விளக்கு

வாரம் ஒருமுறை செய்வது விசேஷம். மகாலெட்சுமியின் அருளை நம் இல்லத்திற்குக் கொண்டு சேர்க்கும் அற்புதமான விளக்கு. இந்த சாம்பலை நாம் திருநீறாகப் பயன்படுத்தலாம்.

இது கரிய நிறத்தில் தான் இருக்கும். இதை நாம் திருநீறுடன் சேர்த்து அணிந்து கொள்ளலாம்.
இந்தப் புகையை வீடு முழுவதும் காட்டலாம்.

இந்த விளக்கை ஏற்றுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்று கேட்கலாம். இது ஒரு கிருமி நாசினி என்பதால் வீட்டில் உள்ள கெட்ட கிருமிகளையும் அழிக்கும்.

வேள்வி செய்த பலனைத் தரும். நினைத்த காரியத்தையும் நிறைவேற்றும். மகாலெட்சுமியின் அருளையும் பெற்றுத் தரும். செல்வ வளத்தையும் தரும். வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை மாற்றி பாசிடிவ் எனர்ஜியை நமக்குத் தரும்.