எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?

கோவில்களில் இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் தீபங்கள் ஏற்ற ஆரம்பித்து விட்டனர். விளக்குப் போடணும்னு சொல்வாங்க. சிலர் ஒண்ணு மட்டும் போடுவாங்க. பெரும்பாலானோர் 2 விளக்கு போடுவாங்க. இங்கே நாம 5க்கு மேல…

கோவில்களில் இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் தீபங்கள் ஏற்ற ஆரம்பித்து விட்டனர். விளக்குப் போடணும்னு சொல்வாங்க. சிலர் ஒண்ணு மட்டும் போடுவாங்க. பெரும்பாலானோர் 2 விளக்கு போடுவாங்க. இங்கே நாம 5க்கு மேல விளக்கு போட்டா அதாவது தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள் விரிவாகப் பார்ப்போம்.

5 தீபங்கள் ஏற்றினால் மன அமைதி பெறும். 7 தீபங்கள் ஏற்றினால் கல்வியில் மேன்மை அடையலாம். 9 தீபங்கள் ஏற்றினால் வியாபாரம் அபிவிருத்தி அடையும். 11 தீபங்கள் ஏற்றினால் செல்வம் பெருகும். 18 தீபங்கள் ஏற்றினால் நவக்கிரக தோஷ நிவர்த்தி அடையலாம். 21 தீபங்கள் ஏற்றினால் நோய், பிணி நீங்கும்.

41 தீபங்கள் ஏற்றினால் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கும். 51 தீபங்கள் ஏற்றினால் திருமணத்துக்கான தடை நீங்கும். 108 தீபங்கள் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும். 508 தீபங்கள் ஏற்றினால் காரியத் தடை நீங்கும். வழக்குகள் வெற்றி பெறும். 108 தீபங்கள் ஏற்றினால் வீடு, மனை வாங்கும் ராஜயோகம் கிட்டும்.

இது எல்லாம் போட்டாச்சு. ஆனாலும் ஒன்றும் நடக்கலையே என சிலர்கள் சொல்லலாம். தீபங்கள் ஏற்றினால் மட்டும் போதாது. அப்படி ஏற்றும்போது நீங்கள் இறைவனிடம் மனப்பூர்வமாக வேண்டுதலையும் சொல்ல வேண்டும். அதே போல உங்கள் வேண்டுதலுக்கேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வெற்றி என்பது நாம் உழைத்தால் மட்டுமே வரும். அதனால் சிலர் சாமி கும்பிட்டால் போதும்.

தேர்வில் வெற்றி பெறலாம் என படிக்காமல் சென்று தேர்வு எழுதினால் எப்படி வெற்றி கிடைக்கும்? நீங்கள் படித்து விட்டு சாமியும் கும்பிட்டுப் போனால் நீங்கள் படித்த பாடங்களில் இருந்து கேள்வி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்படித்தான் உங்கள் வேண்டுதலும். நீங்கள் எந்தெந்த முயற்சிகளை எல்லாம் எடுக்கிறீர்களோ அதெல்லாம் வெற்றி அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இறைவழிபாடும், நீங்கள் வைத்துள்ள முழுமையான நம்பிக்கையும் தான் கொண்டு வந்து சேர்க்கும்.