நரகாசூரன் கதை எப்படின்னு தெரியுமா? தீபாவளி கொண்டாட காரணகர்த்தாவே அவர் தாங்க…

By Sankar Velu

Published:

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் நரகாசூரன் தான். அவர் இறந்த நாளையே நாம் மகிழ்ச்சிகரமாக தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இது எப்படி நடந்ததுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

நரகாசூரன் கதை ராமாயணம் நடந்து முடிந்ததுக்கு அடுத்த யுகமான பாபர் யுகத்துல மகாபாரதத்துக்குக் கொஞ்சம் முன்னாடி நடக்குது. ஆனா மகாபாரதத்துல எந்த ஒரு குறிப்பும் நரகாசூரனைப் பத்தி சொல்லப்படவில்லை. நரகாசூரனோட மகன் பகதத்தா குருசேத்திரப்போரில் கௌரவர்களுக்கு ஆதரவா போரிட்டு அர்ச்சுனரின் கையால் கொல்லப்பட்டதாக மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது.

ராமாயணம், மகாபாரதம் என்ற இந்த ரெண்டு புராணங்களிலும் நரகாசூரன் பிரதிவிஷா என்ற நாட்டை ஆண்டான். ஆனா இவரைப் பற்றி ரெண்டு புராணங்களிலுமே பெரிசா எதையும் சொல்லவில்லை. தனி புராணங்களும் இல்லை.

ஹிரண்யாட்சா என்ற சக்தி வாய்ந்த அரக்கன் பூமாதேவியைக் கடத்தி கடலுக்கு அடியில் ஒளித்து வைத்து இருந்தான். இதனால் ரொம்பவே கோபப்பட்ட விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து அரக்கனைக் கொல்கிறார். இப்படி காப்பாத்துனதனால பூமாதேவிக்கும் வராக அவாதரம் எடுத்த விஷ்ணுவிற்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது.

இந்த நிலையில் பிருதிவிஷா நாட்டை ஆண்ட அரசி தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என பூமாதேவியை வேண்டி தவம் இருக்கிறாள். அப்போ பூமாதேவி அவர்களுக்கு முன் தோன்றி தன்னோட குழந்தையைக் கொடுத்துட்டுப் போயிடுறாங்க.

அந்தக்குழந்தையை நல்லபடியாக வளர்க்கிறாங்க. அந்தக்குழந்தை வளர வளர கர்வமாகி நாட்டை ஆளும்போது மக்களைக் கொடுமைப்படுத்துறாரு. இதனாலேயே அவர் நரகாசூரன்னு அழைக்கப்படுகிறார்.

மற்ற அரசர்களையும் வீழ்த்தி அங்குள்ளவர்களையும் கொடூரமான முறையில் ஆட்சி செய்ய சொல்கிறாரு. நரகாசூரன் அடுத்த முறை இந்திரலோகத்துக்குப் போய் அவருடன் போரிட்டு ஜெயிக்கணும்னு நினைக்கிறாரு.

இதைப் பார்த்த மந்திரி அரசே நீங்கள் இந்திரலோகத்தை ஜெயிக்கணும்னா நீங்க சிரஞ்சீவியா வரம் வாங்கணும். அப்போ தான் அங்குள்ளவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவாங்க. இந்திரலோகத்தையும் கைப்பற்றி ஆட்சி செய்ய முடியும்னு சொல்றாரு.

இதைக்கேட்ட நரகாசூரன் இது சரியான யோசனை. நான் இப்பவே சாகாவரம் வேண்டி தவம் இருக்கப் போறேன்னு சொல்றாரு.

கடுமையா தவம் இருக்காரு. இதைக்கண்டு பூரிப்படைந்த பிரம்ம தேவன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு அவன் சாகாவரம் கேட்க, இது முடியாது. வேறு ஏதாவது கேள் என்கிறார். பிரம்மதேவா என்னைப் பெற்றெடுத்த தாயால் மட்டுமே என்னை அழிக்குமாறு வரம் வேண்டும்.

வேறு யாராலும் என்னை அழிக்க கூடாது என்று விடுகிறார். அவரும் அந்த வரத்தைக் கொடுக்க நரகாசூரன் சந்தோஷப்படுகிறார். இந்திரனோட கோட்டைக்குள் நுழைகிறார். அவரும் தப்பிச்சி போய்விடுகிறார். அவர் எளிதில் இந்திரலோகத்தைக் கைப்பற்றி விடுறாரு. அங்குள்ள தேவர்களையும் சிறைபிடித்து விடுகிறார்.

ரொம்பவே பயந்து போன இந்திரன் விஷ்ணுபகவானின் உதவியை நாடுகிறார். அவர் கிருஷ்ணபகவானை சந்திக்க சொல்கிறார். அவரும் கிருஷ்ண பகவானை சந்தித்து சொல்கிறார். உடனே கிருஷ்ணபகவானும், சத்யபாமாவும் நரகாசூரனை சந்தித்து போரிட ஆரம்பிக்கின்றனர். ஆனால் தன்னால் அவரைக் கொல்ல முடியாது.

சத்யபாமாவால் தான் கொல்ல முடியும் என்று உணர்ந்து கொள்கிறார். உடனே கிருஷ்ணர் மயக்கம் போட்டு விழுகிறார். சத்யபாமா பூமாதேவியின் அவதாரம். இதை அறியாத அவள் நரகாசூரனைக் கொல்கிறார். உயிருக்குப் போராடும் நிலையில் தான் நரகாசூரனுக்கு தன்னைக்கொன்றது பூமாதேவியின் அவதாரம் என தெரிகிறது.

அதனால் சத்யபாமாவும் தன் மகனைக் கொன்று விட்டேனே என வருந்துகிறார். அப்போது நரகாசூரன் சொல்கிறார். தன்னைக் கொன்றது தாயானதால் எனக்கு மகிழ்ச்சியே. இந்த சந்தோஷத்தை எல்லோரும் கொண்டாட வேண்டும் என அன்னை சத்யபாமாவிடம் வரம் கேட்கிறார். அதுவே தீபாவளியானது.