‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைத் தான் பஞ்சாட்சரம் என்பார்கள். இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்குப் பலவித நன்மைகள் உண்டாகின்றன. அதைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக உள்ளது. அதனால் உங்களுக்கு எப்போதெல்லாம் உச்சரிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இதைப் பத்திரமாக வைத்து உச்சரியுங்கள். எண்ணற்ற பலன்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். என்னென்னன்னு பார்க்கலாமா…
நமசிவாய ‘ என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும். ‘நமசிவாய ஊம் நமசிவாய’ என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும். ‘நமசிவயங் செலகை நமசிவாய’ என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.
‘நமசிவாயம் லங்க நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும். ‘சவ்வும் நமசிவாய நமா’ என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.’ஶ்ரீயும் நமசிவாய நமா’ என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள். ‘ஊங்கிறியும் நமசிவாய நமா’ என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
‘அலங்கே நமசிவாய நமோ’ என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும். ‘வநம சிவாய’ என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும். ‘ஓம் நமசிவாய’ என்று செபித்தால் காலனை வெல்லலாம். ‘லங்கிரியும் நமசிவாய’ என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.
‘ஓங்கிறியும் ஓம் நமசிவாய’ என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும். ‘ஓங் ஊங் சிவாய நம உங்நமா’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும். ‘லீங் க்ஷும் சிவாயநம’ என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.
‘லூங் ஓங் நமசிவாய’ என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும். ஓங் அங்கிஷ சிவாய நமா’ என்று ஓதினால் பூமி எங்கும் சஞ்சாரம் செய்யலாம். ‘அங் சிவாய நம’ என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ‘அங் உங் வங் சிவாய நம’ என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும். ‘ஹம் ஹம் சிவாய நமா’ என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்