1. நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலை நகரான நாமக்கல் நகரத்திலேயே இக்கோவில் உள்ளது.
2. நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஓரளவு நடந்து செல்லும் தூரத்தில்தான் இக்கோவில் இருக்கும்.
3. இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4.நாமக்கல் மலைக்கோட்டையின் கீழ் நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.
5. இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனி கோவிலில் காட்சி தருகிறார்.
6.ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும் லட்சுமிதேவிக்கும் காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் உள்ளது.
7. இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடியாகும் பிரமாண்டமாக இந்த சிலை காட்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.
கோவில் வரலாற்றை கீழே பார்ப்போம்
இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார்.அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.”இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கு விட்டு கிளம்பினார்.இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.
பொதுவாக சனியால் பீடிக்கப்பட்டோர் சனிதோஷம் , ஏழரை சனி, ஜென்மச்சனி, கண்டச்சனி என அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம்.