அழகுக் குறிப்புகள்

தலைமுடி உதிராமல் இருக்க கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்!!

7736f340eece586ee0b9dac9a370a920

தலைமுடி உதிராமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் நிச்சயம் இந்த கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்கினை வீட்டில் செய்து பயன்படுத்துதல் வேண்டும்.

தேவையானவை:
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
கற்றாழை – 1 துண்டு
கரிசலாங்கண்ணி இலை- கைப்பிடியளவு
ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    கறிவேப்பிலை மற்றும் கரிசலாங்கண்ணி இலையினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து கற்றாழையின் இருபுறமும் உள்ள முட்களை நீக்கி இதனையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3.    இறுதியில் அரைத்த கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஆலிவ் ஆயில் சேர்த்தால் கறிவேப்பிலை ஹேர் மாஸ்க் ரெடி.
இந்த ஹேர்மாஸ்க்கினை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தடவி, ½ மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.
 

Avatar photo
Staff